83 - ஸூரா அல்முதப்பிபீன் ()

|

(1) மோசடிக்காரர்களுக்குக் கேடுதான்.

(2) அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (அளவையில் பொருளை) நிறைவாக வாங்குகின்றனர்.

(3) அவர்களுக்காக (இவர்கள்) அளந்து கொடுக்கும் போது அல்லது அவர்களுக்காக நிறுத்துக் கொடுக்கும் போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள். (நஷ்டப்படுத்துகிறார்கள்.)

(4) நிச்சயமாக தாங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் நம்பவில்லையா?

(5) மகத்தான ஒரு நாளில், (எழுப்பப்படுவதை அவர்கள் நம்பவில்லையா?)

(6) அகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள்.

(7) அவ்வாறல்ல, நிச்சயமாக தீயவர்களின் பதிவேடு சிஜ்ஜீனில்தான் இருக்கும்.

(8) இன்னும் சிஜ்ஜீன் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?

(9) (அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.

(10) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

(11) (அவர்கள்) கூலி நாளைப் பொய்ப்பிக்கின்றனர்.

(12) பெரும் பாவி, வரம்பு மீறுகிறவன் எல்லோரையும் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

(13) அவன் மீது நம் வசனங்கள் ஓதப்பட்டால், (அவை) முன்னோரின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்.

(14) அவ்வாறல்ல, மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப் படிந்து) மூடின.

(15) அவ்வாறல்ல, நிச்சயமாக அவர்கள் அந்நாளில் அவர்களுடைய இறைவனை விட்டுத் தடுக்கப்பட்டவர்கள்தான். (ஆகவே, அவர்கள் அல்லாஹ்வைக் காணவே மாட்டார்கள்.)

(16) பிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீ பற்றி) எரியக் கூடியவர்கள்தான்.

(17) பிறகு, "நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்.

(18) அவ்வாறல்ல, நிச்சயமாக நல்லோரின் பதிவேடு இல்லிய்யூனில் தான் இருக்கும்.

(19) (நபியே!) ‘இல்லிய்யூன்' என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

(20) (அது நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடு.

(21) நெருக்கமான (வான)வர்கள் அதைக் கண்காணிக்கிறார்கள்.

(22) நிச்சயமாக நல்லோர் "நயீம்' என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.

(23) கட்டில்கள் மீது (அமர்ந்தவாறு) பார்ப்பார்கள்.

(24) அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (நபியே! நீர்) அறிவீர்.

(25) முத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து புகட்டப்படுவார்கள்.

(26) அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும்.

(27) இன்னும் அதன் கலவை "தஸ்னீம்'லிருந்து (இருக்கும்).

(28) (தஸ்னீம் அது) ஒரு நீரூற்று, நெருக்கமாக்கப்பட்டவர்கள் அதில் பருகுவார்கள்.

(29) நிச்சயமாக குற்றம் புரிந்தவர்கள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து சிரிப்பவர்களாக இருந்தார்கள்.

(30) இன்னும் அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கண் ஜாடை காட்டுகிறார்கள்.

(31) இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம் அவர்கள் திரும்பும்போது மகிழ்ச்சியாளர்களாகத் திரும்புகிறார்கள்.

(32) அவர்கள் (-குற்றவாளிகள்) அவர்களைப் பார்க்கும்போது "நிச்சயமாக இவர்கள் வழிதவறியவர்கள்தான்'' எனக் கூறுகிறார்கள்.

(33) (இப்பாவிகளுக்கு அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?) அவர்கள் மீது கண்காணிப்பவர்களாக இவர்கள் அனுப்பப்படவில்லையே!

(34) ஆகவே, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.

(35) கட்டில்கள் மீது (அமர்ந்தவர்களாக பாவிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்.

(36) நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா?

(1) வானம் பிளந்துவிடும் போது,