94 - ஸூரா அஷ்ஷரஹ் ()

|

(2) இன்னும், உம் சுமையை உம்மை விட்டு அகற்றினோம்.

(3) அது, உம் முதுகை முறித்தது.

(4) இன்னும், உமது நினைவை (உமது நற்பெயரை, உமது சிறப்பை) உமக்கு உயர்த்தினோம்.

(5) ஆக, நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.

(6) நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது.

(7) ஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக!

(8) இன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!

(1) (நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?