84 - ஸூரா அல்இன்ஷிகாக் ()

|

(2) அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,

(3) . பூமி விரிக்கப்பட்டு, அது தன்னில் உள்ளவற்றை எரிந்து, காலியாகி விடும்போது.

(4) . பூமி விரிக்கப்பட்டு, அது தன்னில் உள்ளவற்றை எரிந்து, காலியாகி விடும்போது.

(5) அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்தது இன்னும் கீழ்ப்படிந்தது,

(6) மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். அடுத்து நீ அவனை சந்திப்பாய்.

(7) ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),

(8) அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார்.

(9) இன்னும் மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்.

(10) ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,

(11) நாசமே! என அவன் கூவுவான்.

(12) "சயீர்' என்ற நரகத்தில் அவன் பொசுங்குவான்.

(13) நிச்சயமாக அவன் (உலகில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.

(14) நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.

(15) ஏனில்லை! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்.

(16) ஆகவே, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!

(17) இரவின் மீது சத்தியமாக! (அது) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!

(18) சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,

(19) ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிக்கிறீர்கள்.

(20) ஆகவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது)? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.

(21) அவர்கள் மீது அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் சிரம் பணிவதில்லை.

(22) மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கின்றனர்.

(23) அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்.

(24) ஆகவே, துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

(25) (அவர்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.

(1) கோள்களுடைய வானத்தின் மீது சத்தியமாக!