104 - ஸூரா அல்ஹுமஸா ()

|

(2) எவன் செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தானோ,

(3) “நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும்” என அவன் கருதுகிறான்.

(4) அவ்வாறல்ல! நிச்சயமாக அவன் ஹுதமா நரகத்தில் எறியப்படுவான்.

(5) (நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

(6) அதுதான் அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்.

(7) அது (உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும்.

(8) நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)

(9) உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்).

(1) புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.