97 - ஸூரா அல்கத்ர் ()

|

(2) (நபியே!) லைலத்துல் கத்ரு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

(3) லைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.

(4) அதில் மலக்குகளும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்.

(5) ஈடேற்றம் உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).

(1) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை.