(2) இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,
(3) இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்.
(4) அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்.
(5) அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று.
(6) அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக.
(7) ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
(8) இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்.
(1) பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது,