(1) 101.1. மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம்
(2) 101.2. மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரம் (என்றால்) என்ன?
(3) 101.3. -தூதரே!- மக்களின் உள்ளங்களை தன் பெரும் பயங்கரத்தால் திடுக்கிடச் செய்யும் அந்த நேரத்தைப் பற்றி உமக்கு அறிவித்தது எது? நிச்சயமாக அது மறுமை நாளாகும்.
(4) 101.4. மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யும் அந்த நாளில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு பரந்த ஈசல்களைப்போன்று ஆகிவிடுவார்கள்.
(5) 101.5. மலைகள் கடையப்பட்ட பஞ்சைப் போன்று அதன் எளிதாக நகரும்.
(6) 101.6. யாருடைய நற்செயல்கள் அவருடைய தீய செயல்களைவிட கனமாகிவிட்டனவோ.
(7) 101.7. அவர் சுவனத்தில் திருப்தியான வாழ்க்கையை பெற்றிருப்பார்.
(8) 101.8. யாருடைய தீய செயல்கள் அவருடைய நற்செயல்களைவிட கனமாகிவிட்டனவோ,
(9) 101.9. மறுமை நாளில் அவரது தங்குமிடம் நரகமாகும்.
(10) 101.10. -தூதரே!- அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(11) 101.11. அது கடும் வெப்பமுடைய நெருப்பாகும்.