(1) 114.1. -தூதரே!- நீர் கூறுவீராக: நான் மனிதர்களின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(2) 114.2. அவர்களின் விஷயத்தில் தான் விரும்பியவாறு செயல்படும் அவர்களின் அரசனிடம், அவனைத் தவிர வேறு அரசன் அவர்களுக்கு இல்லை.
(3) 114.3. அவர்களின் உண்மையான வணக்கத்திற்குரியவனிடம், அவனைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குத் தகுதியானவன் யாரும் இல்லை.
(4) 114.4. இறைநினைவை விட்டும் கவனமற்றிருக்கும் மனிதனில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் இறை ஞாபகம் ஏற்படும் போது ஒதுங்கிக்கொள்ளும் ஷைத்தானின் தீங்கிலிருந்து (பாதுகாவல் தேடுகிறேன்).
(5) 114.5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.
(6) 114.6. அவன் ஜின்களில் இருப்பதைப் போல மனிதர்களிலும் இருக்கிறான்.