(1) 93.1. அல்லாஹ் முற்பகலைக்கொண்டு சத்தியம் செய்கின்றான்.
(2) 93.2. அவன் இரவைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். அது இருளாகி மக்கள் நடமாடுவதை விட்டும் ஓய்வெடுக்கும் போது,
(3) 93.3. -தூதரே!- வஹி குறிப்பிட்ட காலம்வரை வராமல் இருந்ததனால் இணைவைப்பாளர்கள் கூறுவதுபோன்று உம் இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை, வெறுக்கவுமில்லை.
(4) 93.4. என்றும் முடிவுடையாத நிலையான இன்பத்தைக் கொண்டிருப்பதால் மறுமையின் வீடே உமக்கு உலகத்தைவிடச் சிறந்ததாகும்.
(5) 93.5. விரைவில் உம் இறைவன் உமக்கும் உம் சமூகத்திற்கும் அவன் கொடுத்ததைக்கொண்டு நீர் திருப்தியடையும் வகையில் பெரும் நன்மைகளை உமக்கும் உமது சமூகத்திற்கும் வழங்குவான்.
(6) 93.6. நீர் அநாதையாக இருப்பதைக் கண்டு உமக்கு ஒரு புகலிடத்தை ஏற்படுத்தினான். உம்மீது உம் பாட்டனார் அப்துல் முத்தலிபும் பின்னர் சிறிய தந்தை அபூதாலிபும் அன்பு செலுத்தினார்கள்.
(7) 93.7. ஈமான் என்றால் என்ன? வேதம் என்றால் என்ன? என்பதை அறியாதவராக உம்மைக் கண்ட அவன், நீர் அறியாமல் இருந்தவற்றையெல்லாம் உமக்குக் கற்றுக் கொடுத்தான்.
(8) 93.8. உம்மைத் தேவையுடையவராகக் கண்டு, உம்மைத் வசதியுடையவராக ஆக்கினான்.
(9) 93.9. ஆகவே சிறுவயதில் தந்தையை இழந்தவரிடம் மோசமாக நடந்துகொள்ளாதீர். அவனை இழிவுபடுத்திவிடாதீர்.
(10) 93.10. தேவையோடு யாசிப்பவரை விரட்டிவிடாதீர்.
(11) 93.11. அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவீராக. அவற்றை எடுத்துரைப்பீராக.