(1) 102.1. -மனிதர்களே!- செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் பெருமையடிப்பது உங்களை அல்லாஹ்வுக்கு வழிபடுவதை விட்டும் திருப்பிவிட்டது.
(2) 102.2. நீங்கள் மரணித்து மண்ணறையில் நுழையும் வரை.
(3) 102.3. அவற்றைக் கொண்டு பெருமையடிப்பது அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதை விட்டும் உங்களைத் திருப்பிவிடக் கூடாது. அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.
(4) 102.4. பின்னர் அதன் விளைவை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.
(5) 102.5. நிச்சயமாக உங்களை அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி திட்டமாக உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்திருந்தால் செல்வங்களையும் குழந்தைகளையும் கொண்டு நீங்கள் பெருமைடிப்பதில் ஈடுபடமாட்டீர்கள்.
(6) 102.6. நிச்சயமாக மறுமை நாளில் நீங்கள் நரகத்தை காண்பீர்கள்.
(7) 102.7. பின்னர் அதனை எவ்வித சந்தேகமுமின்றி உறுதியாகக் காண்பீர்கள்.
(8) 102.8. பின்னர் அந்த நாளில் அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த ஆரோக்கியம் செல்வம் இன்னபிற அருட்கொடைகளைக் குறித்து உங்களிடம் கேள்வி கேட்பான்.