80 - ஸூரா அபஸ ()

|

(1) 80.1. அல்லாஹ்வின் தூதர் முகம் கடுகடுத்தார்; புறக்கணித்தார்,

(2) 80.2. நேர்வழியை நாடி அப்துல்லாஹ் இப்னு உம்மீ மக்தூம் அவரிடம் வந்ததற்காக. பார்வையற்றவராக இருந்த அவர் தூதர் இணைவைப்பாளர்களின் தலைவர்கள் நேர்வழி பெறவேண்டுமென்று ஆசைகொண்டவராக அவர்களை அழைப்பதில் ஈடுபட்டிருந்த போது வந்தார்.

(3) 80.3. -தூதரே!- உமக்கு என்ன தெரியும்? இந்தப் பார்வையற்றவர் பாவங்களிலிருந்து தூய்மை பெறலாம்.

(4) 80.4. அல்லது அவர் உம்மிடமிருந்து செவியேற்கும் அறிவுரைகளைக் கொண்டு பயன் பெறலாம்.

(5) 80.5. யார் நீர் கொண்டுவந்ததன்மீது நம்பிக்கைகொள்ளாமல் செல்வமிருப்பதால் தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ.

(6) 80.6. நீர் அவன் பக்கம் முன்னோக்குகின்றீர்.

(7) 80.7. அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி பாவங்களிலிருந்து தூய்மையடையவில்லையெனில் உமக்கு என்னதான் நேரப்போகிறது?.

(8) 80.8. யார் நன்மையைத் தேடியவராக உம் பக்கம் ஓடோடி வந்தாரோ.

(9) 80.9. அவர் தம் இறைவனை அஞ்சியவராகவும் இருக்கின்றார்.

(10) 80.10. நீர் அவரின்பால் பராமுகமாக இருந்து அவர் அல்லாத இணைவைப்பாளர்களின் தலைவர்களின் பக்கம் கவனம் செலுத்துகின்றீர்.

(11) 80.11. விஷயம் அவ்வாறு அல்ல. நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலுமாகும்.

(12) 80.12. யார் அல்லாஹ்வை நினைவுகூர விரும்புவாரோ அவரே அவனை நினைவுகூர்ந்து இந்தக் குர்ஆனில் உள்ளவற்றின் மூலம் அறிவுரை பெறுவார்.

(13) 80.13. இந்தக் குர்ஆன் வானவர்களிடத்தில் கண்ணியமான ஏடுகளில் உள்ளது.

(14) 80.14. அவை உயரமான இடத்திலிருக்கும் உயர்வானவை; அசுத்தம் எதுவும் அண்டாத அளவுக்குத் தூய்மையானவை.

(15) 80.15. அவை வானவர்களில் உள்ள தூதர்களின் கைகளில் இருக்கின்றன.

(16) 80.16. அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் கண்ணியமானவர்கள், நன்மையான செயல்களை, வணக்கவழிபாடுகளை அதிகம் செய்யக்கூடியவர்கள்.

(17) 80.17. நிராகரித்த மனிதன்மீது சாபம் உண்டாகட்டும். அவன் அல்லாஹ்வை எவ்வளவு கடுமையான நிராகரிக்கிறான்!

(18) 80.18. அவனை அல்லாஹ் எப்பொருளிலிருந்து படைத்தான், பூமியில் கர்வம்கொண்டு அவனை நிராகரிப்பதற்கு?

(19) 80.19. சிறிது நீரிலிருந்து அவன் மனிதனைப் படைத்தான். அவனது படைப்பை ஒவ்வொரு கட்டம் கட்டமாக நிர்ணயம் செய்தான்.

(20) 80.20. பின்னர் இந்த நிலைகளுக்குப் பிறகு தன் தாயின் வயிற்றிலிருந்து வெளிப்படுவதை அவனுக்கு எளிதாக்கினான்.

(21) 80.21. பின்னர் உலகில் அவனுக்கு வாழ்நாளின் வயதை நிர்ணயித்த பிறகு அவனை மரணிக்கச் செய்தான். மீண்டும் எழுப்பப்படும் வரை அவன் தங்கியிருக்கும் மண்ணறையை அவனுக்காக ஏற்படுத்தினான்.

(22) 80.22. பின்னர் அவன் நாடும் போது விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் மீண்டும் அவனை உயிர்கொடுத்து எழுப்புகிறான்.

(23) 80.23. இந்த நிராகரிப்பாளன் தான் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டதாக எண்ணுகிறான். அவ்வாறு அல்ல விடயம். அவன் அல்லாஹ் தன்மீது கடமையாக்கிய கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை.

(24) 80.24. அல்லாஹ்வை நிராகரித்த மனிதன் தான் உண்ணுகின்ற உணவைப் பார்க்கட்டும், அது எவ்வாறு கிடைத்தது என்று.

(25) 80.25. அதன் மூலம், வானத்திலிருந்து பலமாக, அடர்த்தியாகப் பொழியும் மழையே.

(26) 80.26. பின்னர் பூமியைப் பிளந்தோம். அதிலிருந்து தாவரம் முளைக்கிறது.

(27) 80.27. அதில் நாம் கோதுமை, சோளம் போன்ற ஏனைய தானியங்களையும் முளைக்கச் செய்தோம்.

(28) 80.28. திராட்சையையும், அவர்களின் கால்நடைகளுக்கு தீவனமாக அமையும் பொருட்டு பச்சைக் காய்கறிகளையும் முளைக்கச் செய்தோம்.

(29) 80.29. அதில் ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம்.

(30) 80.30. அதில் அடர்ந்த மரங்களுடைய தோட்டங்களையும் முளைக்கச் செய்தோம்.

(31) 80.31. பழங்களையும் உங்கள் கால்நடைகள் மேயக்கூடியதையும் நாம் விளையச் செய்தோம்.

(32) 80.32. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கும் பொருட்டு.

(33) 80.33. காதுகளைச் செவிடாக்கும் பெரும் சப்தமான இரண்டாவது சூர் ஊதப்பட்டால்.

(34) 80.34. அந்த நாளில் மனிதன் தன் சகோதரனைவிட்டும் விரண்டோடுவான்.

(35) 80.35. தன் தாய், தந்தையரை விட்டும் விரண்டோடுவான்.

(36) 80.36. தன் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டும் வெருண்டோடுவான்.

(37) 80.37. அந்த நாளின் துன்பத்தின் கடுமையினால் ஒவ்வொருவரும் மற்றவரில் கவனம் செலுத்த முடியாது.

(38) 80.38. அந்நாளில் நற்பாக்கியசாலிகளின் முகங்கள் பிரகாசமானதாக இருக்கும்.

(39) 80.39. அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்தியுள்ள அவனின் அருளினால் சிரித்தவையாக, மகிழ்ச்சியானவையாக இருக்கும்.

(40) 80.40. அந்நாளில் துர்பாக்கியசாலிகளின் முகங்கள் புழுதிபடிந்தவையாக இருக்கும்.

(41) 80.41. இருள் அவற்றைக் சூழ்ந்திருக்கும்.

(42) 80.42. இந்நிலைமையில் வர்ணிக்கப்பட்ட இவர்கள்தாம் நிராகரிப்பிலும் பாவங்களிலும் ஒன்று சேர்ந்தவர்கள்.