(1) உமது உள்ளத்தைத் உமக்கு விரிவுபடுத்தி, வஹியைப் பெறுவதை உமக்கு விருப்பத்திற்குரியாதாக மாற்றினோம்.
(2) உமது முன்னைய பாவங்களை உமக்கு மன்னித்துவிட்டோம். உம்மீதிருந்த அறியாமைக்கால சுமையை உம்மை விட்டும் இறக்கிவிட்டோம்.
(3) 94.3. உமது முதுகை உடைத்துவிடும் அளவுக்கு அது உம்மை சிரமப்படுத்தியிருந்தது.
(4) 94.4. மேலும் நாம் உம் புகழை உயர்த்தினோம். பாங்கு, இகாமத் மற்றும் இன்னபிறவற்றிலும் நீர் நினைவுகூறப்படுகிறவராக மாறிவிட்டீர்.
(5) 94.5. ஆகவே நிச்சயமாக நெருக்கடி, கஷ்டத்துடனே விரிவும் இலகுவும் நிவாரணமும் இருக்கிறது.
(6) 94.6. நிச்சயமாக நெருக்குதல், கஷ்டத்துடனே விரிவும், இலகுவும், நிவாரணமும் இருக்கிறது. நீர் அதனை அறிந்தால் உம் சமூகம் உமக்கு அளிக்கும் துன்பங்கள், உமக்குப் பெரிதாகத் தெரியாது. அது அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை விட்டும் உம்மைத் தடுக்கவும் மாட்டாது.
(7) 94.7. நீர் உம் பணிகளிலிருந்து விடுபட்டவுடன் உம் இறைவனை வணங்குவதில் முழு முயற்சி செய்வீராக.
(8) 94.8. உம் ஆர்வத்தையும் விருப்பத்தையும் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே அமைத்துக் கொள்வீராக.