(1) 37.1. வணக்க வழிபாட்டிற்காக வரிசையாக அணிவகுத்து நிற்கும் வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
(2) 37.2. மேகங்களை அல்லாஹ் நாடிய இடத்தில் பொழிய வைப்பதற்காக ஓட்டிச் செல்லும் வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
(3) 37.3. குர்ஆன் ஓதக்கூடிய வானவர்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
(4) 37.4. -மனிதர்களே!- நிச்சயமாக உங்களின் வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் ஒருவன்தான். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ்.
(5) 37.5. அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கு இடைப்பட்டுள்ளவற்றின் இறைவன். வருடம் முழுவதும் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் திசைகளின் இறைவன்.
(6) 37.6. நிச்சயமாக நாம் பூமிக்கு அருகிலிருக்கும் வானத்தை பார்வைக்கு மின்னக்கூடிய முத்துக்களைப் போன்ற நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்துள்ளோம்.
(7) 37.7. நட்சத்திரங்களைக் கொண்டு அருகிலிருக்கும் உலக வானத்தை வழிப்படாமல் இருக்கும் மூர்க்கத்தனமான ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் பாதுகாத்துள்ளோம். அவற்றைக் கொண்டு அந்த ஷைத்தான்கள் எறியப்படுகிறார்கள்.
(8) 37.8. வானத்தில் வானவர்கள் தங்கள் இறைவன் அவனுடைய சட்ட, ஏற்பாடு ரீதியாக வஹி அறிவித்த செய்திகளைக் குறித்து பேசிக் கொண்டிருப்பதை அந்த ஷைத்தான்கள் செவியேற்க முடியாது. அவர்கள் எல்லா புறத்திலிருந்தும் எரிகொள்ளிகளால் எரியப்படுவார்கள்.
(9) 37.9. வானவர்களின் உரையாடலை செவியேற்பதை விட்டும் தூரமாக்கும் பொருட்டு அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மறுமையில் என்றும் முடிவடையாத நிலையான கடும் வேதனையுண்டு.
(10) 37.10. ஆயினும் திருட்டுத்தனமாக எதையேனும் ஷைத்தான்கள் ஒட்டுக் கேட்டாலே தவிர. அது பூமியிலுள்ளவர்களுக்குத் தெரியாத வானவர்கள் தங்களுக்குள் உரையாடும் விஷயமாகும். அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனைப் பின்தொடர்ந்து அவனை எரித்து விடுகிறது. சில சமயங்களில் அவன் எரிந்து சாவதற்கு முன்னரே தன் சகாக்களின் காதுகளில் போட்டுவிடுகிறான். ஜோதிடர்களுக்கு அச்செய்தி வந்தடைகிறது. அவர்கள் அதனோடு நூறு பொய்யை கலந்துவிடுகிறார்கள்.
(11) 37.11. -முஹம்மதே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்களிடம் கேட்பீராக: “நாம் படைத்த வானங்களையும் பூமியையும் வானவர்களையும் விட அவர்கள் படைப்பில் கடினமானவர்களாகவும் உடல் வலிமையுடைவர்களாகவும் பாரிய உடலுறுப்பு உள்ளவர்களாகவும் ஆகிவிட்டனரா?” நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்தோம். அவர்கள் பலவீனமான பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து படைக்கப்படவர்களாக உள்ள நிலமையில் எவ்வாறு அவர்கள் மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிக்கிறார்கள்?!
(12) 37.12. -முஹம்மதே!- என்றாலும் அல்லாஹ்வின் வல்லமையைக் குறித்து, அவன் படைப்புகளின் விவகாரங்களை நிர்வகிப்பது குறித்து நீர் ஆச்சரியப்படுகின்றீர். மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் நிராகரிப்பாளர்களை எண்ணி ஆச்சரியப்படுகின்றீர். மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை என்பதால் அது குறித்து நீர் கூறுவதை அவர்கள் பரிகாசம் செய்கிறார்கள்.
(13) 37.13. இந்த இணைவைப்பாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அவர்களிடம் இருக்கும் இறுகிய உள்ளத்தின் காரணமாக அறிவுரை பெறுவதுமில்லை; அதைக் கொண்டு பயனடைவதுமில்லை.
(14) 37.14. தூதரின் நம்பகத்தன்மையை அறிவிக்கும் சான்றுகளில் ஏதேனும் ஒன்றைக் கண்டால் அதைப் பரிகாசம் செய்வதிலும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதிலும் எல்லை மீறுகின்றனர்.
(15) 37.15. அவர்கள் கூறுகிறார்கள்: “முஹம்மது கொண்டுவந்தது தெளிவான சூனியமேயாகும்”.
(16) 37.16. நாங்கள் இறந்து மண்ணாகவும் உக்கிய எலும்புகளாவும் ஆகிவிட்டாலும் நிச்சயமாக மீண்டும் உயிரோடு எழுப்பப்படுவோமா? நிச்சயமாக இது சாத்தியமற்றது.
(17) 37.17. நமக்கு முன்னால் இறந்துவிட்ட நம்முடைய முன்னோர்களும் எழுப்பப்படுவார்களா?”
(18) 37.18. -முஹம்மதே!- நீர் அவர்களிடம் பதில் கூறுவீராக: “ஆம். நீங்கள் மண்ணாகவும் உக்கிய எலும்புகளாகவும் ஆகிவிட்டாலும் எழுப்பப்படுவீர்கள். உங்களின் முன்னோர்களும் எழுப்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இழிவடைந்த நிலையில் எழுப்பப்படுவீர்கள்.
(19) 37.19. நிச்சயமாக அது (இரண்டாவது முறை) ஊதப்படும் ஒரேயொரு ஊதல்தான். அப்போது அனைவரும் மறுமை நாளின் பயங்கரங்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ் தம்மை என்ன செய்வானோ என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
(20) 37.20. மறுமை நாளை மறுத்த இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட அழிவே! இது அல்லாஹ் தன் அடியார்களுக்கு அவர்கள் உலக வாழ்வில் செய்த செயல்களுக்கேற்ப கூலி வழங்கும் நாளாயிற்றே!
(21) 37.21. அவர்களிடம் கூறப்படும்: “இது அடியார்களுக்கிடையே தீர்ப்பு வழங்கப்படும் உலகில் நீங்கள் பொய்ப்பித்து, மறுத்துக் கொண்டிருந்த நாளாகும்.
(22) 37.22,23. அந்த நாளில் வானவர்களிடம் கூறப்படும்: ”தங்களின் இணைவைப்பினால் அநியாயம் செய்த இணைவைப்பாளர்களையும் இணைவைப்பில் அவர்களைப் போன்றவர்களையும் பொய்ப்பித்தலில் அவர்களை பின்பற்றியவர்களையும் அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகளையும் ஒன்றுதிரட்டுங்கள். அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் அறிமுகப்படுத்தி அதற்கு வழிகாட்டுங்கள். அதன்பால் அவர்களை இழுத்துச் செல்லுங்கள். நிச்சயமாக அதுதான் அவர்களின் இருப்பிடமாகும்.
(23) 37.22,23. அந்த நாளில் வானவர்களிடம் கூறப்படும்: ”தங்களின் இணைவைப்பினால் அநியாயம் செய்த இணைவைப்பாளர்களையும் அவர்களைப் போன்றவர்களையும் அல்லாஹ்வைத்தவிர அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகளையும் ஒன்றுதிரட்டுங்கள். அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள். அதன்பால் அவர்களை இழுத்துச் செல்லுங்கள். அதுதான் அவர்களின் இருப்பிடமாகும்.
(24) 37.24. நரகத்தில் நுழையச் செய்வதற்கு முன்னால் விசாரணைக்காக அவர்களை தடுத்து நிறுத்துங்கள். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். அதன்பிறகு அவர்களை நரகத்தின்பால் இழுத்துச் செல்லுங்கள்.
(25) 37.25. அவர்களிடம் கண்டிக்கும் விதமாக கேட்கப்படும்: “உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் உலகில் உதவிக் கொண்டிருந்தவாறு ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில்லையே! உங்களின் சிலைகள் உங்களுக்கு உதவி செய்யும் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களே!
(26) 37.26. மாறாக அவர்கள் இன்று அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இழிவானவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களின் இயலாமையினால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளமாட்டார்கள்.
(27) 37.27. பழித்துக்கொள்வதும், சண்டையிடுவதும் பயனளிக்காத சமயத்தில் அவர்கள் பழித்துக்கொண்டவர்களாகவும், சண்டைபிடித்தவர்களாகவும் அவர்களில் சிலர் சிலரை முன்னோக்குவார்கள்.
(28) 37.28. பின்பற்றிய தொண்டர்கள் தலைவர்களிடம் கூறுவார்கள்: “-எங்களின் தலைவர்களே!- நிச்சயமாக நீங்கள் மார்க்கம் மற்றும் சத்தியத்தின் வழியால் எங்களிடம் வந்து அல்லாஹ்வை நிராகரிப்பதையும் அவனுக்கு இணைவைப்பதையும் பாவங்கள் புரிவதையும் எங்களுக்கு அலங்கரித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தை விட்டும் எங்களை தூரமாக்கிக்கொண்டுமிருந்தீர்கள்.”
(29) 37.29. பின்பற்றப்பட்ட தலைவர்கள் தொண்டர்களிடம் கூறுவார்கள்: -“நீங்கள் எண்ணுவது போலல்ல- விடயம். மாறாக நீங்கள் நம்பிக்கைகொள்ளாமல் நிராகரிப்பில் இருந்தீர்கள். அது மட்டுமின்றி நீங்கள் மறுப்போராகவும் இருந்தீர்கள்.
(30) 37.30. பின்பற்றியவர்களே! நாங்கள் உங்களை நிராகரிப்பிலும் இணைவைப்பிலும் பாவங்கள் செய்வதிலும் தள்ளிவிடுவதற்கு உங்கள் மீது எந்த ஆதிக்கத்தையும் பெற்றிருக்கவில்லை. மாறாக நீங்கள் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் வரம்புமீறும் கூட்டமாக இருந்தீர்கள்.
(31) 37.31. எங்கள் மீதும் உங்கள் மீதும் அல்லாஹ்வின் எச்சரிக்கை உறுதியாகிவிட்டது. (நான் உன்னையும் அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன். பார்க்க, அத்தியாயம் ஸாத், 85வது வசனம்) நிச்சயமாக நம் இறைவன் எச்சரித்ததை -சந்தேகம் இல்லாமல்- நாம் அனுபவித்தே தீருவோம்.
(32) 37.32. நாங்கள் உங்களை நிராகரிப்பு, வழிகேட்டின் பக்கம் அழைத்தோம். நிச்சயமாக நாம் நேர்வழியை விட்டும் வழிகெட்டவர்களாக இருந்தோம்.
(33) 37.33. எனவே நிச்சயமாக மறுமை நாளில் பின்பற்றிய தொண்டர்களும் பின்பற்றப்பட்ட தலைவர்களும் வேதனையில் பங்காளிகளாக இருப்பார்கள்.
(34) 37.34. நிச்சயமாக நாம் இவர்களுக்கு வேதனையைச் சுவைக்கச்செய்தது போன்றே ஏனைய குற்றவாளிகளையும் தண்டிக்கின்றோம்.
(35) 37.35. உலகில் “வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதன்படி செயல்படுங்கள். அதற்கு முரணானவற்றை விட்டு விடுங்கள்” என்று கூறப்பட்ட போது இந்த இணைவைப்பாளர்கள் அதற்கு விடையளிக்காமல், சத்தியத்திற்கு அடிபணியாமல் கர்வம் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.
(36) 37.36. அவர்கள் தமது நிராகரிப்புக்கு ஆதாரம் கூறும் விதமாக அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துக் கூறினார்கள்: “ஒரு பைத்தியக்கார கவிஞரின் சொல்கேட்டு எங்களின் கடவுள்களை வணங்குவதை நாங்கள் விட்டுவிட வேண்டுமா?”.
(37) 37.37. அவர்கள் மிகப் பெரும் அவதூறைக் கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் பைத்தியக்காரராகவோ, கவிஞராகவோ இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் ஓரிறைக்கொள்கையின் பக்கமும் அவனின் தூதரைப் பின்பற்றுமாறும் அழைக்கும் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஏகத்துவம், மறுமை உண்டு என அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டு வந்தவற்றில் அவர்களை உண்மைப்படுத்துகின்றார். எந்தவொரு விஷயத்திலும்அவர்களுக்கு மாறுசெய்யவில்லை.
(38) 37.38. -இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்கள் உங்களின் நிராகரிப்பினாலும் தூதர்களை நீங்கள் பொய்ப்பித்ததனாலும் மறுமை நாளில் வேதனை மிக்க தண்டனையை அனுபவிப்பீர்கள்.
(39) 37.39. -இணைவைப்பாளர்களே!- நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த இறைநிராகரிப்பு மற்றும் பாவங்களில் ஈடுபடுதல் என்பவற்றின் காரணமாகத்தான் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.
(40) 37.40. ஆனால் நம்பிக்கை கொண்ட அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ் தனது வணக்கத்துக்காக தூய்மையாக்கிவிட்டான். அவர்களும் அவனையே தூய்மையாக வணங்கினார்கள். அவர்கள் இந்த வேதனையிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.
(41) 37.41. அவனை மட்டுமே வணங்கிய அந்த அடியார்களுக்கு தூய்மையிலும் அழகிலும் நிரந்தரத்திலும் அறியப்பட்ட உணவை அல்லாஹ் வழங்குவான்.
(42) 37.42. அந்த பலவிதமான சிறந்த கனிகள்தான் அவர்கள் உண்ண விரும்பும் உணவாகும். அதற்கும் மேல் பதவிகள் உயர்த்தப்படுவதன் மூலமும் அல்லாஹ்வின் திருமுகத்தை காணுவதன் மூலமும் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
(43) 37.43. இவையனைத்தையும் அவர்கள் என்றும் முடிவடையாத, அழியாத நிலையான இன்பம் அளிக்கும் சுவனங்களில் பெறுவார்கள்.
(44) 37.44. ஒருவரையொருவர் பார்த்து முன்னோக்கியவாறு அவர்கள் கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள்.
(45) 37.45. மதுக்கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவருமாறு செய்யப்படும். அது தூய்மையில் ஓடக்கூடிய நீரைப் போன்று இருக்கும்.
(46) 37.46. வெண்மையான நிறமுடையதாக இருக்கும். பருகுபவர்கள் அதன் முழுமையான சுவையை அனுபவிப்பார்கள்.
(47) 37.47. அது உலகில் காணப்படும் மதுவைப் போன்று இருக்காது. போதையினால் அறிவை மழுங்கடிக்கச் செய்யும் எதுவும் அதில் இல்லை. அதை குடிப்பவருக்கு தலை வலியும் ஏற்படாது. பருகுபவரின் உடலும் அறிவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
(48) 37.48. சுவனத்தில் அவர்களிடத்தில் பரிசுத்தமான பெண்கள் இருப்பார்கள். அவர்கள் தங்களின் கணவன்மார்களைத் தவிர மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்காத கண்ணழகிகளாவர்.
(49) 37.49. அவர்கள் மஞ்சள் கலந்த தமது வெண்மையில் கை படாமல் பாதுகாப்பாக மறைத்துவைக்கப்பட்ட பறவையின் முட்டையைப் போன்று இருப்பார்கள்.
(50) 37.50. சுவனவாசிகள் ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு தமது இறந்த காலம், அவர்களுக்கு உலகில் நிகழ்ந்தவற்றைக் குறித்து பேசிக்கொண்டு இருப்பார்கள்.
(51) 37.51. அந்த நம்பிக்கையாளர்களில் ஒருவர் கூறுவார்: “நிச்சயமாக மீண்டும் எழுப்பப்படுவதை மறுக்கும் ஒரு நண்பன் உலகில் எனக்கு இருந்தான்.”
(52) 37.52. அவன் என்னிடம் மறுத்து, பரிகாசம் செய்தவனாகக் கேட்டான்: -“நண்பனே!- இறந்தவர்கள் மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்பதை நீ நம்புகிறாயா?
(53) 37.53. நாம் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மக்கிப்போன பின்னர் நாம் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பப்பட்டு, உலகில் செய்த செயல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவோமா என்ன?”
(54) 37.54. நம்பிக்கைகொண்ட நண்பன் சுவனவாசிகளான தன் தோழர்களிடம் கேட்பான்: “மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்த அந்த நண்பனின் இருப்பிடத்தை நாம் காண்பதற்காக என்னுடன் எட்டிப்பாருங்கள்.”
(55) 37.55. அவன் பார்த்ததும் தனது நண்பனை அவன் நரகத்தில் நடுவில் இருப்பதைக் காண்பான்.
(56) 37.56. அந்த நம்பிக்கையாளன் கூறுவான்: “-நண்பனே!- அல்லாஹ்வின் மீது சத்தியமாக, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பபடுவதை மறுத்து நிராகரிப்பின்பால் நீ என்னை அழைத்து நரகத்தில் நுழைத்து என்னை அழிக்கப்பார்த்தாய்.
(57) 37.57. அல்லாஹ் என்மீது அருள்புரிந்து ஈமானின்பால் எனக்கு பாக்கியமளித்து நேர்வழிகாட்டவில்லை என்றால் உன்னைப்போல் வேதனை செய்ய கொண்டுவரப்பட்டவர்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன்.
(58) 37.58. தனது நண்பனாக இருந்த நரகவாசியுடன் அந்த நம்பிக்கையாளன் உரையாடிய பிறகு சுவனவாசிகளான தன் தோழர்களை நோக்கிக் கூறுவான்: -சுவனவாதிகளான- நாம் இறந்துவிடக்கூடியவர்கள் அல்ல.
(59) 37.59. உலக வாழ்வில் நமக்கு ஏற்பட்ட மரணத்தைத் தவிர. மாறாக நாம் சுவனத்தில் என்றென்றும் நிலைத்திருப்போம். நிராகரிப்பாளர்கள் வேதனை செய்யப்படுவது போன்று நாம் வேதனை செய்யப்பட மாட்டோம்.
(60) 37.60. நிச்சயமாக எங்களின் இறைவன் எங்களுக்கு அளித்த நாம் நுழையும் இந்த சுவனம், அதில் நிரந்தரம், நரகிலிருந்து பாதுகாப்பு ஆகியவையே நிச்சயமாக ஈடிணையற்ற பெரும் வெற்றியாகும்.
(61) 37.61. இந்த மகத்தான வெகுமதிக்காகவே செயல்படக்கூடியவர்கள் கட்டாயம் செயல்பட வேண்டும். ஏனெனில் நிச்சயமாக இதுதான் இலாபம் தரக்கூடிய வியாபாரமாகும்.
(62) 37.62. அல்லாஹ் தன்னை மட்டுமே வழிப்படக்கூடியவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள மேற்கூறப்பட்ட அருட்கொடைகள் இடத்தால், சங்கையால் சிறந்தவனவா? அல்லது நிராகரிப்பாளர்களின் உணவு என்று குர்ஆனில் கூறப்பட்ட சபிக்கப்பட்ட ஸக்கூம் மரமா? அது ஊட்டமும் தராது. பசியையும் போக்காது.
(63) 37.63. நிச்சயமாக நாம் இந்த மரத்தை நிராகரிப்பாலும் பாவத்தினாலும் அநியாயமிழைத்தோருக்கு ஒரு சோதனையாக ஆக்கியுள்ளோம். அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நெருப்பு மரத்தைத் தின்று விடுமே! அதில் மரம் முளைப்பதற்கு வாய்ப்பே இல்லையே!”
(64) 37.64. நிச்சயமாக ஸக்கூம் மரம் விளையும் இடம் மோசமானதாகும். ஏனெனில் அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் ஒரு மரமாகும்.
(65) 37.65. அதிலிருந்து விளையும் பழம் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று பார்ப்பதற்கு அசிங்கமானதாகும். கோரமான காட்சி மோசமான உள்ளமைப்பிற்கு ஆதாரமாகும். அதன் பழங்கள் மோசமான சுவையுடையவை என்பதே இதன் பொருளாகும்.
(66) 37.66. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் அதன் கசப்பான அவலட்சனமான பழங்களையே உண்பார்கள். அவற்றைக்கொண்டு காலியான தங்களின் வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
(67) 37.67. பின்னர் நிச்சயமாக அவர்கள் அவற்றை உண்ட பிறகு மோசமான கொதிக்கும் கலப்பான பானம் அவர்களுக்கு உண்டு.
(68) 37.68. பின்னர் நிச்சயமாக அவர்கள் நரக வேதனையின்பால் திரும்புவார்கள். அவர்கள் ஒரு வேதனையிலிருந்து மற்றொரு வேதனையின்பால் இடம்பெயர்ந்து கொண்டேயிருப்பார்கள்.
(69) 37.69. நிச்சயமாக இந்த நிராகரிப்பாளர்கள் தங்களின் முன்னோர்களை நேரான பதையை விட்டும் வழிகெட்டவர்களாகக் கண்டார்கள். எனவே ஆதாரமின்றி அவர்களை குருட்டுத்தனமான முன்மாதிரியாக ஆக்கினார்கள்.
(70) 37.70. அவர்கள் தங்களின் முன்னோர்களின் வழிகேட்டு அடிச்சுவடுகளை விரைந்து பின்பற்றினார்கள்.
(71) 37.71. அவர்களுக்கு முன்னரும் முன்னோர்களில் பெரும்பாலானோர் வழிகெட்டிருந்தார்கள். எனவே, -தூதரே!- உம் சமூகத்தினர் முதலாவதாக வழிகெட்ட சமூகமல்ல.
(72) 37.72. அந்த முந்தைய சமூகங்களிலும் நாம் நம் வேதனையைக் குறித்து எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்களை அனுப்பினோம். ஆனால் அந்த மக்கள் நிராகரித்தார்கள்.
(73) 37.73. -தூதரே!- தூதர்களால் எச்சரிக்கப்பட்டும் அதற்கு விடையளிக்காத சமூகங்களின் கதி என்னவாயிற்று என்பதை சிந்தித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக அவர்கள் தங்களின் நிராகரிப்பினாலும் தூதர்களை பொய்ப்பித்ததினாலும் நரகத்தில் நிரந்தரமாக நுழைவதே அவர்களது முடிவாக இருந்தது.
(74) 37.74. ஆயினும் தன்னை நம்பிக்கைகொள்வதற்கு அல்லாஹ் சுத்தியாக எடுத்தவர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் அந்த பொய்ப்பித்த நிராகரிப்பாளர்களின் இறுதி முடிவான வேதனையிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.
(75) 37.75. நம்முடைய தூதர் நூஹை அவரது சமூகம் பொய்ப்பித்த போது அவர் நம்மை அழைத்தார். நாம் அவருக்கு மிகச் சிறந்த முறையில் பதிலளிப்போராக இருந்தோம். திட்டமாக அவர்களுக்கெதிரான அவரது பிரார்த்தனைக்கு விடையளிப்பதில் விரைந்தோம்.
(76) 37.76. அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் அவருடன் இருந்த நம்பிக்கையாளர்களையும் அவரது சமூகத்தின் தொல்லையிலிருந்தும் அவரது சமூகத்தின் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக நாம் அனுப்பிய பாரிய வெள்ளப் பிரளயத்திலிருந்தும் பாதுகாத்தோம்.
(77) 37.77. நம்பிக்கைகொண்ட அவரது குடும்பத்தினரையும் அவரைப் பின்பற்றியவர்களை மட்டும் நாம் காப்பாற்றினோம். அவரது சமூகத்தின் நராகரிப்பாளர்களான மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.
(78) 37.78. அடுத்துவந்த சமூகங்களில் அவருக்கு நற்பெயரை நிலைத்திருக்கச் செய்தோம். அவர்கள் அதன் மூலம் அவரைப் புகழ்கின்றனர்.
(79) 37.79. பின்னால் வரும் சமூகங்களில் அவரைக் குறித்து எந்த தீங்கான விஷயமும் கூறப்படுவதை விட்டும் பாதுகாப்பு உண்டு. மாறாக புகழும் நற்பெயரும் நிலைத்து நிற்கும்.
(80) 37.80. நிச்சயமாக நாம் நூஹிற்கு வழங்கிய இந்த கூலியைப் போன்றே தனக்கு வணக்கம் மற்றும் அவனுக்கு மாத்திரமே கட்டுப்படும் தன்மை மூலம் நற்செயல் புரிபவர்களுக்கும் நாம் கூலி வழங்குகின்றோம்.
(81) 37.81. நிச்சயமாக நூஹ் நம்பிக்கைகொண்டு, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்பட்ட நம்முடைய அடியார்களில் உள்ளவராவார்.
(82) 37.82. பின்னர் மற்றவர்களை அவர்களுக்கு அனுப்பிய வெள்ளப் பிரளயத்தால் அழித்துவிட்டோம். அவர்களில் எவரும் எஞ்சியிருக்கவில்லை.
(83) 37.83. நிச்சயமாக அல்லாஹ்வின் ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பதில் அவருடன் உடன்பட்ட அவரது மார்க்கத்தைச் சார்ந்தவராக இப்ராஹீம் இருந்தார்.
(84) 37.84. அவர் இணைவைப்பிலிருந்து நீங்கிய படைப்புகளின் விடயத்தில் அல்லாஹ்வுக்கு விசுவாசமான தூய உள்ளத்துடன் தனது இறைவனிடம் வந்ததை நினைவு கூர்வீராக.
(85) 37.85. அவர் இணைவைக்கும் தம் தந்தையிடமும் சமூகத்திடமும் கண்டிக்கும் தோரணையில் கேட்டார்: “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்?”
(86) 37.86. அல்லாஹ் அல்லாத போலியான தெய்வங்களை நீங்கள் வணங்குகிறீர்களா?
(87) 37.87. -என் சமூகமே!- அகிலத்தாரைப் படைத்துப் பராமரிக்கும் இறைவனல்லாதவர்களையும் வணங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் அவனைச் சந்திக்கும் போது, அவன் உங்களை என்ன செய்வான் என்பதாக நினைக்கிறீர்கள்?
(88) 37.88. இப்ராஹீம் தம் சமூகத்தாருடன் வெளியேறுவதைத் தவிர்ப்பதற்கு திட்டம் தீட்டியவராக நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
(89) 37.89. அவர்களின் திருவிழாவிற்குச் செல்லாமல் இருக்கும் பொருட்டு “நிச்சயமாக நான் நோயாளி” என்று காரணம் கூறினார்.
(90) 37.90. அவர்கள் அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
(91) 37.91. அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களின் பக்கம் வந்தார். அவற்றைப் பரிகாசம் செய்தவராகக் கேட்டார்: “இணைவைப்பாளர்கள் உங்களுக்காக செய்யும் உணவை நீங்கள் உண்பதில்லையா?
(92) 37.92. உங்களுக்கு என்னவாயிற்று? ஏன் நீங்கள் பேசுவதில்லை? உங்களிடம் கேட்பவர்களுக்குப் பதிலளிப்பதில்லை? இது போன்றவையா அல்லாஹ்வை விடுத்து வணங்கப்படுகிறது!.
(93) 37.93. அவற்றின்பால் சென்று அவற்றை உடைப்பதற்காக இப்ராஹீம் அவற்றை தம் வலது கையால் அடித்தார்.
(94) 37.94. இந்த சிலைகளை வணங்குவோர் அவரை முன்னோக்கி விரைந்தோடி வந்தார்கள்.
(95) 37.95. இப்ராஹீம் அவர்களை உறுதியோடு எதிர்கொண்டார். அவர்களைக் கண்டிக்கும் விதமாக அவர்களிடம் கேட்டார்: “உங்கள் கைகளால் நீங்கள் செதுக்கிக்கொண்ட அல்லாஹ் அல்லாத தெய்வங்களை வணங்குகிறீர்களா?”
(96) 37.96. அல்லாஹ்தான் உங்களையும் உங்களின் செயல்களையும் படைத்தான். இந்த சிலைகளும் நீங்கள் செய்தவைகளே. எனவே அவன் ஒருவனே அவனோடு எந்த இணையும் கற்பிக்கப்படாமல் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன்.
(97) 37.97. அவரை வாதத்தில் எதிர்கொள்ள முடியாத அவர்கள் அதிகாரத்தின் பக்கம் தஞ்சமடைந்தார்கள். இப்ராஹீமை என்ன செய்வது என்பது குறித்து தங்களுக்குள் ஆலோசித்தார்கள். கூறினார்கள்: “அவருக்காக ஒரு கட்டடம் கட்டி அதில் விறகுகளை நிரப்பி நெருப்பை மூட்டுங்கள். பின்னர் அதில் அவரை எறிந்து விடுங்கள்.
(98) 37.98. அவருடைய சமூகம் அவரை அழித்து அவரிடமிருந்து விடுபடுவதற்கு ஏற்பாடு செய்து அவருக்க தீங்கு செய்ய நாடியது. ஆனால் நாம் அவருக்கு நெருப்பை குளிர்ச்சியானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்கி அவர்களை நஷ்டமடைந்தவர்களாக்கி விட்டோம்.
(99) 37.99. இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக நான் என் சமூகத்தின் ஊரை விட்டுவிட்டு என் இறைவனை வணங்குவதற்காக அவன்பால் புலம்பெயர்ந்து செல்கின்றேன். என் இறைவன் எனக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையானவற்றை அறிவித்துத் தருவான்.
(100) 37.100. என் இறைவா! தனிமையில் எனக்கு உதவியாகவும் என் சமூகத்திற்கு மாற்றாகவும் இருக்கக்கூடிய நல்ல குழந்தையை வழங்குவாயாக.
(101) 101. நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து ஒரு குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறினோம். அக்குழந்தை வளர்ந்து பொறுமையாளனாக மாறும். அந்தக் குழந்தைதான் இஸ்மாயீல் ஆவார்.
(102) 37.102. இஸ்மாயீல் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தபோது, தன் தந்தையுடன் சேர்ந்து நடந்து திரியும் வயதை அடைந்தபோது அவரது தந்தை இப்ராஹீம் ஒரு கனவு கண்டார். தூதர்களின் கனவு வஹியின் ஒரு பகுதியாகும். அவர் தம் மகனிடம் கனவு பற்றி கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். இது குறித்து உன் கருத்தைக் கூறு.” அதற்கு இஸ்மாயீல் விடையளித்தவராக கூறினார்: “தந்தையே! என்னை அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டதைச் செயல்படுத்துங்கள். அல்லாஹ் நாடினால் என்னை அல்லாஹ்வின் தீர்ப்பைப் பொருந்திக்கொண்ட பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.
(103) 37.103. இருவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அறுக்குமாறு ஏவப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக இப்ராஹீம் தம் மகனை முகங்குப்புற கிடத்தி வைத்த போது,
(104) 37.104. அவர் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இஸ்மாயீலை அறுக்க நெருங்கிய போது “இப்ராஹீமே” என்று நாம் அவரை அழைத்தோம்.
(105) 37.105. உமது மகனை அறுக்க உறுதி பூண்டதன் மூலம் நீர் கண்ட கனவை உண்மைப்படுத்திக் காட்டினீர். -இந்த மாபெரும் சோதனையிலிருந்து நாம் உம்மை விடுவித்து கூலி வழங்கியது போன்றே- நிச்சயமாக நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம். சோதனைகளிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் அவர்களை விடுவிக்கின்றோம்.
(106) 37.106. நிச்சயமாக இது தெளிவான சோதனையாகும். இப்ராஹீம் அதில் வெற்றி பெற்றுவிட்டார்.
(107) 37.107. இஸ்மாயீலுக்குப் பகரமாக அறுக்கப்படுவதற்கு பரிகாரமாக ஒரு பெரும் செம்மறியாட்டை வழங்கினோம்.
(108) 37.108. பின்னர் தோன்றிய தலைமுறைகளில் இப்ராஹீமிற்கு நற்பெயரை நிலைத்திருக்கச் செய்தோம்.
(109) 37.109. அவருக்கு அல்லாஹ்வின் வாழ்த்தும் எல்லா வகையான தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் பிரார்த்தனையும் கிடைக்கட்டும்.
(110) 37.110. நாம் இப்ராஹீமுக்குக் அவரது கட்டுப்பாட்டுக்குக் கூலி வழங்கியது போன்றே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம்.
(111) 37.111. நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வின் அடிமைத்துவத்துக்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றும் நம்பிக்கைகொண்ட நம் அடியார்களில் உள்ளவராக இருந்தார்.
(112) 37.112. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தம் ஒரே மகனான இஸ்மாயீலை அறுக்க துணிந்ததற்குக் கூலியாக நாம் அவருக்கு இன்னொரு குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறினோம். அக்குழந்தை நபியாகவும் நல்லடியாராகவும் மாறும். அவர்தான் இஸ்ஹாக் ஆவார்.
(113) 37.113. நாம் அவர் மீதும் அவருடைய மகன் இஸ்ஹாக் மீதும் அருள் வளங்களை இறக்கினோம். அவர்கள் இருவருக்கும் ஏராளமான அருட்கொடைகளை வழங்கினோம். அவற்றில் அவர்கள் இருவருக்கும் அதிகமான குழந்தைகள் வழங்கப்பட்டதும் அடங்கும். அவர்கள் இருவரின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நற்செயல் புரிபவர்களும் இருந்தார்கள். அவர்களில் நிராகரித்து பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே தெளிவாக அநீதி இழைப்பவர்களும் இருந்தார்கள்.
(114) 37.114. நாம் மூஸாவுக்கும் அவருடைய சகோதரர் ஹாரூனுக்கும் நபித்துவத்தை வழங்கி அவர்கள் மீது அருள்புரிந்தோம்.
(115) 37.115. அவர்கள் இருவரையும் அவர்களின் சமூகமான இஸ்ராயீலின் மக்களையும் ஃபிர்அவ்னின் அடிமைத்தனத்திலிருந்தும் மூழ்குவதிலிருந்தும் நாம் காப்பாற்றினோம்.
(116) 37.116. ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய படையினருக்கும் எதிராக நாம் அவர்களுக்கு உதவிபுரிந்தோம். அவர்களே தமது எதிரிகளை விட மேலோங்கி நின்றார்கள்.
(117) 37.117. நாம் மூஸாவுக்கும் அவரது சகோதரர் ஹாரூனுக்கும் தவ்ராத்தை அல்லாஹ்விடமிருந்து சந்தேகமற்ற தெளிவான வேதமாக வழங்கினோம்.
(118) 37.118. அவர்களுக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டினோம். அது படைத்தவனின் திருப்தியைப் பெற்றுத்தரும் இஸ்லாம் எனும் மார்க்கத்தின் வழியாகும்.
(119) 37.119. பின்னால் வந்த தலைமுறைகளில் அவர்கள் இருவருக்கும் நற்பெயரையும் நற்புகழையும் நிலைத்திருக்கும்படிச் செய்தோம்.
(120) 37.120. அவர்கள் இருவருக்கும் அல்லாஹ்வின் வாழ்த்தும் புகழும் தீங்கான எல்லா விஷயங்களை விட்டும் தப்புவதற்கான துஆவும் உண்டு.
(121) 37.121. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் இந்த அழகிய கூலியை வழங்கியது போன்றே தங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரிபவர்களுக்குக் நிச்சயமாக கூலி வழங்குகின்றோம்.
(122) 37.122. நிச்சயமாக மூஸாவும் ஹாரூனும் தமது மார்க்கத்தின்படி செயல்பட்ட நம்பிக்கைகொண்ட நம் அடியார்களில் உள்ளவர்களாக இருந்தார்கள்.
(123) 37.123. நிச்சயமாக இல்யாஸ் தம் இறைவனிடமிருந்து வந்த தூதர்களில் ஒருவராக இருந்தார். அல்லாஹ் அவருக்கு நபித்துவத்தை, தூதுத்துவத்தை அளித்து அருள்புரிந்தான்.
(124) 37.124. அவர் தூதுராக அனுப்பப்பட்ட தம் சமூகமான இஸ்ராயீலின் மக்களிடம் கூறினார்: “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?” ஏகத்துவம் அவனது கட்டளையில் உள்ளதாகும். இணைவைப்பு அவனால் தடைசெய்யப்பட்டவைகளில் உள்ளதாகும்.
(125) 37.125. நீங்கள் மிகச் சிறந்த படைப்பாளனான அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு பஃல் என்னும் உங்களின் சிலையை வணங்குகிறீர்களா?
(126) 37.126. அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் முன்னோர்களையும் படைத்த இறைவன். அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகள் அல்ல.
(127) 37.127. அவரது சமூகத்தினர் அவரை பொய்ப்பித்தார்கள். அதனால் அவர்கள் வேதனைக்கு கொண்டுவரப்படுவார்கள்.
(128) 37.128. ஆயினும் அவரது சமூகத்தில் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு அவனை மட்டுமே வணங்கியவர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் வேதனைக்கு கொண்டுவரப்படுவதில் இருந்து தப்பிவிடுவார்கள்.
(129) 37.129. நாம் பின்னர் வந்த தலைமுறைகளில் அவருக்கு நற்பெயரையும் நற்புகழையும் நிலைத்திருக்கச் செய்தோம்.
(130) 37.130. இல்யாஸின் மீது அல்லாஹ்வின் வாழ்த்தும் புகழும் உண்டாகட்டும்.
(131) 37.131. நிச்சயமாக நாம் இல்யாஸிற்கு இந்த அழகிய நற்கூலியை வழங்கியது போன்றே நம்பிக்கைகொண்ட நம் அடியார்களில் நற்காரியமாற்றுவோருக்கும் கூலி வழங்குகின்றோம்.
(132) 37.132. நிச்சயமாக இல்யாஸ் தங்கள் இறைவனின் மீதுள்ள நம்பிக்கையை உண்மைப்படுத்தி உண்மையாக நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் உள்ளவராக இருந்தார்.
(133) 37.133. நிச்சயமாக லூத்தும் தமது சமூகங்களின்பால் நன்மாராயம் கூறுவோராகவும் எச்சரிப்போராகவும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் இறைத் தூதர்களில் ஒருவராக இருந்தார்.
(134) 37.134. நாம் அவரையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் அவரது சமூகத்தின் மீது அனுப்பப்பட்ட வேதனையிலிருந்து காப்பாற்றியதையும் நினைவு கூறுவீராக.
(135) 37.135. ஆனால் அவரது மனைவியைத் தவிர. அவளது சமூகத்தைப் போன்று அவளும் நிராகரிப்பவளாக இருந்தாள் அவளது சமூகத்தின் வேதனை அவளையும் சூழ்ந்துகொண்டது.
(136) 37.136. பின்னர் அவருடைய சமூகத்தில் அவர் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தாமல் பொய்ப்பித்துக்கொண்டிருந்த மற்றவர்களையும் அழித்துவிட்டோம்.
(137) 37.137. -மக்காவாசிகளே!- நிச்சயமாக நீங்கள் ஷாம் தேசத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும்போது அதிகாலையில் அவர்களின் வசிப்பிடங்களை கடந்துதான் செல்கிறீர்கள்.
(138) 37.138. அவ்வாறு மாலையிலும் அவர்களின் வசிப்பிடங்களை கடந்துதான் செல்கிறீர்கள்.நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா? அவர்களின் நிராகரிப்பினாலும் பொய்ப்பித்ததனாலும் அவர்களுக்கு முன்னால் எவரும் செய்யாத மானக் கேடான காரியத்தில் ஈடுபட்டதன் பின்னர் அவர்களுக்கு நிகழ்ந்த கதியை எண்ணி படிப்பினை பெறமாட்டீர்களா?
(139) 37.139. நிச்சயமாக எங்களின் அடியாரான யூனுஸும், தமது சமூகங்களின்பால் நன்மாராயம் கூறுவோராகவும் எச்சரிப்போராகவும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் இறைத் தூதர்களில் ஒருவராக இருந்தார்.
(140) 37.140. அவர் தனது இறைவனின் அனுமதியின்றி தனது சமூகத்தை விட்டு ஓடி பயணிகளாலும் பொருட்களாலும் நிரப்பப்பட்ட கப்பலில் ஏறிக் கொண்ட போது.
(141) 37.141. கப்பல் நிரம்பியதால் மூழ்கத் தொடங்கியது. அதிகமான பயணிகளால் கப்பல் மூழ்காமல் இருக்கும் பொருட்டு பயணிகளில் சிலரைக் குறைப்பதற்காக அவர்கள் சீட்டுக் குலுக்கிப்போட்டனர். அவ்வாறு சீட்டுக் குலுக்கிப் போட்டு தோல்வியடைந்தவர்களில் யூனுசும் ஒருவராக இருந்தார். அவர்கள் அவரைக் கடலில் தூக்கிப் போட்டனர்.
(142) 37.142. அவர்கள் அவரைக் கடலில் தூக்கிப் போட்டபோது ஒரு பெரிய மீன் அவரை விழுங்கி விட்டது. தம் இறைவனின் அனுமதியின்றி கடலுக்குச் சென்றதனால் அவர் பழிப்பிற்குரிய செயலைச் செய்தவராக இருந்தார்.
(143) 37.143. நிச்சயமாக யூனுஸ் தனக்கு நேர்ந்த அசம்பாவிதத்திற்கு முன்னால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூறக்கூடியவராக இல்லாமல் இருந்திருந்தால், அந்த மீனின் வயிற்றில் இருந்துகொண்டு அல்லாஹ்வை துதிபாடாமல் இருந்திருந்தால்
(144) 37.144. அந்த மீனின் வயிற்றிலேயே அவர் மறுமை நாள் வரை தங்கியிருப்பார்; அதுவே அவருக்கு அடக்கஸ்த்தலமாகியிருக்கும்.
(145) 37.145. அந்த மீனின் வயிற்றிலிருந்து கட்டங்களோ, மரங்களோ அற்ற வெட்ட வெளியில் அவரை வீசினோம். சில காலம் மீனின் வயிற்றில் தங்கியிருந்ததால் அவர் பலவீனமானவராக இருந்தார்.
(146) 37.146. அந்த வெட்ட வெளியில் அவர் நிழல்பெற்று அதிலிருந்து உண்ணும் வகையில் ஒரு சுரைச்செடியை முளைக்கச் செய்தோம்.
(147) 37.147. அவரை அவரது சமூகத்தின்பால் தூதராக அனுப்பினோம். அவர்கள் ஒரு இலட்சம் பேர். இல்லை, அவர்கள் அதைவிட அதிகமாக இருப்பார்கள்.
(148) 37.148. அவர்கள் நம்பிக்கைகொண்டு அவர் கொண்டு வந்ததை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தவணை முடியும் வரை அல்லாஹ் உலக வாழ்வில் அவர்களை வாழச்செய்தான்.
(149) 37.149. -முஹம்மதே!- நீர் இணைவைப்பாளர்களிடம் மறுக்கும் தொனியில் கேட்பீராக: “நீங்கள் வெறுக்கும் பெண் மக்களை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தி நீங்கள் விரும்பக்கூடிய ஆண் மக்களை உங்களுக்கு ஏற்படுத்திக் கொள்கிறீர்களா? இது எந்த வகையான பங்கீடு?
(150) 37.150. நிச்சயமாக வானவர்களை பெண்கள் என்று அவர்கள் எவ்வாறு எண்ணுகிறார்கள்? அவர்கள் படைக்கப்பட்ட போது அங்கிருக்கவுமில்லை, அதனை அவர்கள் பார்க்கவுமில்லையே!
(151) இணைவைப்பாளர்கள் அல்லாஹ் மீது கூறும் அவதூறுகளில் ஒன்றுதான் அவனுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறுவதாகும். நிச்சயமாக அவர்கள் தமது இந்த வாதத்தில் பொய்யர்களே.
(152) இணைவைப்பாளர்கள் அல்லாஹ் மீது கூறும் அவதூறுகளில் ஒன்றுதான் அவனுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறுவதாகும். நிச்சயமாக அவர்கள் தமது இந்த வாதத்தில் பொய்யர்களே.
(153) 37.153. அல்லாஹ் நீங்கள் விரும்பக்கூடிய ஆண்மக்களை விட்டுவிட்டு நீங்கள் வெறுக்கக்கூடிய பெண்மக்களை தனக்கென தேர்ந்தெடுத்துக் கொண்டானா? ஒரு போதும் இல்லை.
(154) 37.154. இணைவைப்பாளர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும் உங்களுக்கு ஆண் பிள்ளைகளையும் எடுத்து, இவ்வாறு அநியாயமாக தீர்ப்பளிக்கின்றீர்களே?
(155) 37.155. உங்களின் இந்த தீய கொள்கை தவறு என்பதை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? நிச்சயமாக நீங்கள் சிந்தித்திருந்தால் இக்கருத்தைக் கூறியிருக்க மாட்டீர்கள்.
(156) 37.156. அல்லது உங்களிடம் இதற்கு வேதத்திலிருந்தோ தூதரிடமிருந்தோ தெளிவான ஆதாரம், சான்று இருக்கின்றதா?
(157) 37.157. உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கான ஆதாரத்தைத் தாங்கியுள்ள வேதத்தைக் கொண்டு வாருங்கள்.
(158) 37.158. வானவர்கள் அல்லாஹ்வின் மகள்கள் என்று எண்ணி இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுக்கும் அவர்களை விட்டும் மறைவான வானவர்களுக்கும் இடையே உறவுமுறையை ஏற்படுத்திவிட்டார்கள். இணைவைப்பாளர்களை அல்லாஹ் விசாரணைக்காக கொண்டுவருவான் என்பதை வானவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
(159) 37.159. இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் பிள்ளை, இணை, மற்றும் ஏனைய பொருத்தமற்ற பண்புகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
(160) 37.160. ஆனால் மனத்தூய்மையுள்ள அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் அவனுக்கு தகுதியான மகத்துவமும் பூரணத்துவமும் மிக்க பண்புகளைத் தவிர வேறெதனைக் கொண்டும் அவனை வர்ணிக்க மாட்டார்கள்.
(161) 37.161. -இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களும்
(162) 37.162. சத்திய மார்க்கத்தை விட்டு யாரையும் வழிகெடுக்க முடியாது.
(163) 37.163. ஆயினும் யாரைக் குறித்து அவர் நரகவாசி என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டானோ அவரைத் தவிர. எனவே நிச்சயமாக அவன் விடயத்தில் அல்லாஹ்வின் விதி செல்லுபடியாகி நிராகரித்து நரகம் செல்கிறான். உங்களுக்கும் உங்கள் தெய்வங்களுக்கும் அதனைச் செய்வதற்கு எந்த ஆற்றலும் இல்லை.
(164) 37.164. வானவர்கள் தாங்கள் அல்லாஹ்விற்கு தம் அடிமைத்துவத்தைத் தெளிவுபடுத்தியவர்களாகவும், இணைவைப்பாளர்கள் எண்ணுவதை விட்டும் தம்மை விடுவித்தவர்களாகவும் கூறுவார்கள்: “எங்களிலுள்ள ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வை வணங்குவதில், அவனுக்குக் கட்டுப்படுவதில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கின்றது.”
(165) 37.165,166. நிச்சயமாக -நாங்கள் வானவர்கள்- அல்லாஹ்வை வணங்குவதற்காக, வழிப்படுவதற்காக வரிசையாக நிற்கக்கூடியவர்கள். திட்டமாக அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளை, வர்ணனைகளை விட்டும் அவனை தூய்மைப்படுத்துவார்கள்.
(166) 37.165,166. நாங்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக வரிசையாக நிற்கக்கூடியவர்கள். அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளைவிட்டும் அவனது தூய்மையைப் பறைசாற்றக்கூடியவர்கள்.
(167) 37.167-170. நிச்சயமாக மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமை நாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
(168) 37.167-170. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
(169) 37.167-170. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
(170) 37.167-170. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
(171) 37.171-173. நம் தூதர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் தங்கள் எதிரிகளை வென்று விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.
(172) 37.171-173. நம் தூதர்களுக்கு நாம் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் மேலோங்கி விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.
(173) 37.171-173. நம் தூதர்களுக்கு நாம் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் மேலோங்கி விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.
(174) 37.174. -தூதரே!- பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்களை அல்லாஹ் அறிந்த தவணையில் வேதனை அவர்களை வந்தடையும் நேரம் வரை புறக்கணித்து விடுவீராக.
(175) 37.175. வேதனை அவர்கள் மீது இறங்கும் போது அவர்களை நோக்குவீராக.கண்ணால் பார்ப்பது அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காத அச்சந்தர்ப்பத்தில் அவர்களும் பார்ப்பார்கள்.
(176) 37.176. இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் வேதனையை விரைவாக வேண்டுகிறார்களா?
(177) 37.177. அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கி விட்டால் அந்த காலைப் பொழுது அவர்களுக்கு மிக மோசமான காலைப் பொழுதாக இருக்கும்.
(178) 37.178. -தூதரே!- அல்லாஹ் தண்டனையைக்கொண்டு தீர்ப்பளிக்கும் வரை அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக.
(179) 37.179. நீர் பார்த்துக் கொள்ளும். அவர்களும் தங்கள் மீது இறங்கப்போகும் இறைவேதனையை, தண்டனையைக் காண்பார்கள்.
(180) 37.180. -முஹம்மதே!- பலத்தின் அதிபதியாகிய உம் இறைவன் இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் குறைபாடான பண்புகளை விட்டும் தூய்மையானவன்.
(181) 37.181. கண்ணியமிக்க அவனுடைய தூதர்கள் மீது அல்லாஹ்வின் வாழ்த்தும் புகழும் உண்டாகட்டும்.
(182) 37.182. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே அதற்குத் தகுதியானவன். அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன். அவனைத்த விர அவர்களுக்கு வேறு இறைவன் இல்லை.