(1) 42.1,2. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
(2) 42.1,2. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
(3) 42.3. இந்த வஹியைப் போன்றதை முஹம்மதே உமக்கும் உமக்கு முன்னர் வந்த அல்லாஹ்வின் நபிமார்களுக்கும் அறிவித்தவன் அல்லாஹ்தான். அவன் தன் எதிரிகளைத் தண்டிப்பதில் மிகைத்தவன்; தனது திட்டமிடலிலும் படைப்பிலும் ஞானம் மிக்கவன்.
(4) 42.4. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றைப் படைத்தல், ஆட்சி செய்தல், திட்டமிடல் என்பன அல்லாஹ்வுக்கே உரியன. அவன் உள்ளமையிலும் அந்தஸ்திலும் ஆதிக்கத்திலும் மிக உயர்ந்தவன்; தனது உள்ளமையில் மகத்தானவன்.
(5) 42.5. அவனுடைய வல்லமையில் வெளிப்பாடு: பிரமாண்டமான, உயரமான வானங்கள் பிளந்து பூமியின் மீது விழப் பார்க்கின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு அடிபணியும் பொருட்டு அவனைப் போற்றிப் புகழ்கிறார்கள். பூமியில் உள்ளவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
(6) 42.6. அல்லாஹ்வைத் தவிர சிலைகளை பாதுகாவலர்களாகவும் வணங்கும் தெய்வங்களாகவும் ஆக்கிக் கொண்டவர்களை அவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவர்களின் செயல்களை பதிவு செய்கிறான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான். -தூதரே!- நீர் அவர்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பாளர் அல்ல. அவர்களின் செயல்களைக் குறித்து நீர் ஒருபோதும் கேட்கப்படமாட்டீர். நிச்சயமாக நீர் எடுத்துரைப்பவர் மட்டுமே.
(7) 42.7. -தூதரே!- உமக்கு முன் வந்த நபிமார்களுக்கு நாம் வஹி அறிவித்தவாறே உமக்கும் அரபி மொழியில் அமைந்துள்ள இந்த குர்ஆனை வஹியாக அறிவித்துள்ளோம். அது மக்காவாசிகளையும் அதனைச் சுற்றி இருக்கின்ற அரபுக்களையும் பின்னர் மனிதர்கள் அனைவரையும் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகவும் முன்னோர்களும் பின்னோர்களும் விசாரணைக்காக ஒரே மைதானத்தில் ஒன்றுதிரட்டப்படும் மறுமை நாளைக் குறித்து நீர் மக்களுக்கு அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவும்தான். அந்த நாள் நிகழ்வதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. அந்நாளில் மனிதர்கள் இருபிரிவினராக பிரிந்துவிடுவார்கள். ஒரு பிரிவினர் சுவனத்தில் இருப்பார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களாவர். மற்றொரு பிரிவினர் நரகத்தில் இருப்பார்கள் அவர்கள் நிராகரிப்பாளர்களாவர்.
(8) 42.8. அல்லாஹ் அவர்களை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரே சமூகமாக ஆக்க நாடியிருந்தால் அவ்வாறு செய்திருப்பான். அவர்கள் அனைவரையும் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்திருப்பான். ஆயினும் அவன் அறிந்த நோக்கத்தின்படி தான் நாடியவர்களை இஸ்லாத்தில் பிரவேசிக்கச் செய்து அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கிறான். நிராகரித்து, பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்கும் பொறுப்பாளர்களோஅல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாக்கக்கூடிய உதவியாளர்களோ யாரும் இல்லை.
(9) 42.9. மாறாக இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வைவிடுத்து மற்றவர்களை தாம் நேசிக்கும் நேசர்களாக எடுத்துக்கொண்டார்கள். அல்லாஹ்வே உண்மையான நேசனாவான். அவனைத் தவிர மற்றவர்கள் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ மாட்டார்கள். அவனே விசாரணை செய்வதற்காகவும் கூலி வழங்குவதற்காகவும் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புகிறான். அவனால் இயலாதது எதுவும் இல்லை.
(10) 42.10. -மனிதர்களே!- நீங்கள் கருத்துவேறுபாடு கொண்ட மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களின் அல்லது கிளை விஷயங்களின் தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது. எனவே அதனை அவனது வேதத்திலோ அல்லது அவனது தூதரின் வழிமுறையிலோ தேடவேண்டும். இந்த பண்புகளை உடையவன்தான் என் இறைவன். நான் என்னுடைய அனைத்து விவகாரங்களிலும் அவன்மீதே நம்பிக்கை வைத்தேன். பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.
(11) 42.11. அல்லாஹ்வே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவன் உங்களிலிருந்து உங்களுக்கு துணைகளை ஏற்படுத்தியுள்ளான். உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் உங்களுக்காக அவை பெருகும்பொருட்டு இணைகளாகப் படைத்துள்ளான். உங்களை திருமணத்தின் மூலம் இணைகளாக்கி பெருகச் செய்கிறான். உங்களுக்காக ஏற்படுத்திய கால்நடைகளைக் கொண்டு அவற்றின் இறைச்சி, பால் ஆகியவற்றைக் கொண்டு உங்களை வாழச் செய்கிறான். அவனுடைய படைப்புகளில் எதுவும் அவனுக்கு நிகர் இல்லை. அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக நற்செயல்களுக்கு நன்மையும் தீய செயல்களுக்கு தீமையும் கிடைக்கும்.
(12) 42.12. வானங்கள் மற்றும் பூமியினுடைய கருவூலங்களின் திறவுகோல்கள் அவனிடம் மட்டுமே உள்ளன. அவன் தன் அடியார்களில் தான் நாடியோரை - அவர்கள் நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்களா என்பதைச் - சோதிக்கும் பொருட்டு அவர்களுக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடியோரை - அவர்கள் பொறுமையைக் கடைபிடிக்கிறார்களா? அல்லது அல்லாஹ்வின் விதியை நொந்துகொள்கிறார்களா என்பதைச் - சோதிக்கும்பொருட்டு அதில் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறான். நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். அடியார்களுக்கு நன்மைதரும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(13) 42.13. நாம் நூஹிற்கு எதை எடுத்துரைக்குமாறும் செயல்படுமாறும் கட்டளையிட்டோமோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக ஆக்கியுள்ளான். -தூதரே!- நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு எடுத்துரைக்குமாறும் செயல்படுமாறும் கட்டளையிட்டதும் இதுதான் அதன் சாராம்சம்: “நீங்கள் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் பிரிந்துவிடாதீர்கள்.” நீர் இணைவைப்பாளர்களை அல்லாஹ்வை ஒருமைப்படுத்துமாறும் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குவதை விட்டுவிடுமாறும் அழைப்பது அவர்களுக்குக் கடினமாக இருக்கின்றது. அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோரைத் தேர்ந்தெடுத்து தன்னை வணங்குவதற்கும் கீழ்ப்படிவதற்கும் பாக்கியம் புரிகிறான். அவர்களில் தன் பாவங்களுக்கு மன்னிப்புக்கோரி அவன் பக்கம் திரும்புபவர்களுக்குத்தான் தன் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்.
(14) 42.14. முஹம்மது தூதராக அனுப்பப்பட்டு ஆதாரம் நிலைநாட்டப்பட்ட பிறகே நிராகரிப்பாளர்களும் இணைவைப்பாளர்களும் பிளவுபட்டார்கள். அவர்கள் அநீதி இழைத்ததன் காரணமாகத்தான் பிளவுபட்டார்கள். அல்லாஹ் தனது அறிவில் முடிவு செய்துள்ள குறிப்பிட்ட தவணையான மறுமை வரை அவர்களை விட்டும் வேதனையைத் தாமதப்படுத்துவதாக முன்பே முடிவு செய்யப்பட்டிருக்காவிட்டால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளித்து அவர்களின் நிராகரிப்பினாலும் அவனது தூதர்களை பொய்ப்பித்ததனாலும் தண்டனையைத் துரிதப்படுத்தியிருப்பான். நிச்சயமாக தங்களின் முன்னோர்களுக்கு பின் தோன்றிய தவ்ராத்தைப் பெற்ற யூதர்களும் இன்ஜீலைப் பெற்ற கிறிஸ்தவர்களும் முஹம்மது கொண்டுவந்துள்ள இந்த குர்ஆனைக்குறித்து சந்தேகத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அதனை மறுக்கின்றார்கள்.
(15) 42.15. நேரான இந்த மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக. அல்லாஹ் உமக்குக் கட்டளையிட்டபடி அதில் உறுதியாக இருப்பீராக. அவர்களின் தீய மனஇச்சைகளைப் பின்பற்றாதீர். அவர்களுடன் விவாதம் புரியும் போது நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வின் மீதும் அவன் தன் தூதர்களின் மீது இறக்கிய வேதங்களின் மீதும் நம்பிக்கைகொண்டேன். அவன் உங்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளான். நான் வணங்கும் அல்லாஹ்தான் எங்களின் இறைவனும் உங்கள் அனைவரின் இறைவனுமாவான். நன்மையோ, தீமையோ எங்களுக்கு எங்களின் செயல்கள். உங்களுக்கு உங்களின் செயல்கள். ஆதாரம் தெளிவான பின்னர் உங்களுக்கும் எங்களுக்குமிடையே எந்த விவாதமும் இல்லை. அல்லாஹ் நம் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். மறுமை நாளில் அவன் பக்கமே திரும்ப வேண்டும். அவன் நம்மில் ஒவ்வொருவருக்கும் உரிய கூலியை வழங்கிடுவான். அப்போது பொய்யரும் உண்மையாளரும் அசத்தியவாதியும் சத்தியவாதியும் தெளிவாகிவிடும்.
(16) 42.16. மக்கள் முஹம்மதின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தில் தவறான ஆதாரங்களைக் கொண்டு தர்க்கம் புரிபவர்களின் தர்க்கம் இறைவனிடத்திலும் நம்பிக்கையாளர்களிடத்திலும் வீணானதேயாகும். அதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து சத்தியத்தை மறுத்ததனால் அவர்களின் மீது அவனது கோபம் உண்டாகும். மறுமை நாளில் அவர்களுக்குக் கடுமையான வேதனை காத்திருக்கின்றது.
(17) 42.17. நிராகரிப்பாளர்களின் வாதங்கள் தவறானவை என்பதைத் தெளிவுபடுத்திய இறைவன் முஸ்லிம் ஆதாரமாகக்கொளளும் ஆதாரங்களின் அடிப்படையான அல்குர்ஆனைப் பற்றித் தெளிவுபடுத்துகிறான். அவன் கூறுகிறான்: அல்லாஹ்தான் சந்தேகமற்ற உண்மையைக் கொண்டு குர்ஆனை இறக்கியுள்ளான். மக்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக நீதியை இறக்கியுள்ளான். இந்த நிராகரிப்பாளர்கள் பொய் எனக் கூறும் மறுமை நாள் சமீபத்தில் நிகழ்ந்துவிடலாம். உண்மையில் வரக்கூடிய ஒவ்வொன்றும் நெருங்கிவிட்டவையே.
(18) 42.18. அதன்மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் அதனை விரைவாக வேண்டுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கையோ, நற்கூலி தண்டனை வழங்கப்படுவதையோ நம்புவதில்லை. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்கள் தங்களின் முடிவின் மீதுள்ள அச்சத்தினால் அதனைக்குறித்து அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். திட்டமாக அது சந்தேகமற்ற உண்மை என்பதை அவர்கள் உறுதியாக அறிவார்கள். அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக மறுமை நாளைக்குறித்து தர்க்கம் செய்பவர்கள், அது நிகழும் என்பதில் சந்தேகம் கொள்பவர்கள் சத்தியத்தைவிட்டும் தூரமான வழிகேட்டில் இருக்கின்றார்கள்.
(19) 42.19. அல்லாஹ் தன் அடியார்களுடன் பெரும் கிருபையாளனாக இருக்கின்றான். அவன் தான் நாடியவர்களுக்கு தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான். தான் நாடியவர்களுக்கு தனது ஞானம் மற்றும் நுணுக்கத்தின் பிரகாரம் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். அவனை யாராலும் மிகைக்க முடியாத பலமுள்ளவன். தன் எதிரிகளைத் தண்டிக்க வல்லமையுள்ளவன்.
(20) 42.20. யார் மறுமைக்காகச் செயல்பட்டு அதன் நன்மையை விரும்புவாரோ நாம் அவருக்கு பலமடங்கு நன்மையை அளிப்போம். ஒரு நன்மை பத்திலிருந்து எழுநூறு நன்மைகளாக, பன்மடங்காகப் பெருகுகிறது. யார் உலகத்தை மட்டும் விரும்புவாரோ நாம் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்கினை அளித்துவிடுவோம். மறுமையைவிட உலகைத் தேர்ந்தெடுத்ததனால் மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை.
(21) 42.21. அல்லது இந்த இணைவைப்பாளர்களுக்கு அல்லாஹ்வைத் தவிர இருக்கும் தெய்வங்கள் அவன் அனுமதியளிக்காத இணைவைப்பு, ஹலாலை ஹராமாக்கி, ஹராத்தை ஹலால் ஆக்கிவிட்டனவா? அல்லாஹ் முரண்பட்டவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்கு குறிப்பிட்ட தவணையை நிர்ணயித்து அதுவரைக்கும் அவர்களுக்கு அவகாசம் வழங்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பு செய்திருப்பான். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கின்றது.
(22) 42.22. -தூதரே!- இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் தாங்கள் சம்பாதித்த பாவங்களினால் தங்களின் மீது வேதனை சந்தேகம் இல்லாமல் இறங்கிவிடுமோ என்று பயந்து கொண்டிருப்பார்கள். பாவமன்னிப்புக் கோராமல் வெறும் பயத்தினால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதற்கு மாறாக அவர்களில் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டவர்கள் சுவனப் பூங்காக்களில் இன்பம் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் இறைவனிடம் தாங்கள் விரும்புகின்ற என்றும் முடிவடையாத நிலையான இன்பங்களையெல்லாம் பெறுவார்கள். இது மாபெரும் அருளாகும். இதற்கு இணையான வேறு அருள் இல்லை.
(23) 42.23. தன்மீதும் தன் தூதர் மீதும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரியும் அடியார்களுக்கு தன் தூதரின் மூலமாக அல்லாஹ் மகத்தான இந்த நற்செய்தியை அளிக்கின்றான். -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் எடுத்துரைக்கும் இந்த சத்தியத்திற்கு உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. ஆனால் ஒரேயொரு நன்மையை எதிர்பார்க்கிறேன். அதனால் ஏற்படும் நன்மையும் உங்களையே சாரும். அது, நான் உங்களின் உறவினராக இருப்பதால் நீங்கள் என்னை நேசிக்க வேண்டும் என்பதே அதுவாகும். யார் ஒரு நன்மையைச் சம்பாதிப்பாரோ நாம் அவருக்கு அதனை பன்மடங்காக்கித் தருவோம். ஒரு நலவுக்கு அதைப்போன்ற பத்து மடங்கு நன்மையுண்டு. நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் தன் திருப்தியை நாடி அவர்கள் செய்யும் நற்செயல்களுக்கு நன்றி பாராட்டுபவனாகவும் இருக்கின்றான்.
(24) 42.24. முஹம்மது இந்த குர்ஆனைப் புனைந்து விட்டு அதனைத் தனது இறைவன் கூறியதாகக் கூறுகின்றார் என்பது இணைவைப்பாளர்களின் எண்ணமாகும். அவர்களுக்கு மறுப்பாக அல்லாஹ் கூறுகிறான்: ஒரு பொய்யைப் புனைய உனது மனம் விரும்பினால் உமது உள்ளத்தின் மீது முத்திரையிட்டு புனையப்பட்ட அசத்தியத்தை அழித்துவிடுவேன். சத்தியத்தை நிலைநிறுத்துவேன். அவ்வாறு எந்த விடயமும் நடைபெறாமை அல்லாஹ்விடமிருந்து தனக்கு வஹி அறிவிக்கப்படுள்ளது என் நபியவர்களின் நம்பகத் தன்மைக்கான சான்றாகும். அவர் . நிச்சயமாக அவன் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
(25) 42.25. அவனே தன் அடியார்கள் நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றிலிருந்து பாவமன்னிப்புக் கோரினால் அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான். அவர்கள் செய்த பாவங்களை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறான். நீங்கள் செய்யும் அனைத்தையும் அவன் அறிகிறான். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
(26) 42.26. அவன் தன் மீதும் தன் தூதர்கள் மீதும் நம்பிக்கைகொண்டு நன்மைசெய்தோரின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்கிறான். தன் அருளிலிருந்து அவர்கள் கேட்காதவற்றையும் இன்னும் அதிகமாக வழங்குகிறான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரிப்பவர்களுக்கு மறுமை நாளில் கடுமையான வேதனை காத்திருக்கின்றது.
(27) 42.27. அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரம் வழங்கியிருந்தால் அவர்கள் பூமியில் அநியாயமாக வரம்புமீறியிருப்பார்கள். ஆயினும் அல்லாஹ் தான் நாடிய ஒரு அளவோடு விசாலமாகவும் நெருக்கடியாகவும் அதனை இறக்கிவைக்கிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவற்றைப் பார்க்கக்கூடியவன். அவன் வழங்குவதும் வழங்காமலிருப்பதும் ஒரு நோக்கத்திற்காகவேயாகும்.
(28) 42.28. அவனே தன் அடியார்கள் மழை இறங்காது என்று நம்பிக்கையிழந்தபிறகு அவர்களின் மீது மழை பொழியச் செய்கிறான். இந்த மழையைப் பரவச் செய்கிறான். பூமியில் தாவரங்கள் முளைக்கின்றன. அவன் தன் அடியார்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கக்கூடியவன். எல்லா நிலையிலும் புகழுக்குரியவன்.
(29) 42.29. அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவைதான், வானங்கள் மற்றும் பூமியைப் படைத்து அவையிரண்டிலும் அவன் பரவச் செய்துள்ள வியப்பூட்டும் படைப்புகளாகும். அவன் தான் நாடிய சமயத்தில் அவர்களை ஒன்றுதிரட்டுவதற்கும் கூலி வழங்குவதற்கும் ஆற்றலுடையவன். அவர்களை முதல் தடவை படைப்பது எவ்வாறு அவனால் முடியுமோ அது போன்றே இதுவும் முடியாததல்ல.
(30) 42.30. -மனிதர்களே!- உங்கள் உயிர்களிலோ, செல்வங்களிலோ உங்களுக்கு ஏற்படும் எந்த துன்பமானாலும் அது நீங்கள் சம்பாதித்த பாவங்களின் விளைவேயாகும். அவன் உங்களின் அநேகமான பாவங்களை கண்டும்காணாமல் விட்டுவிடுகிறான். அவற்றிற்காக உங்களைத் தண்டிப்பதில்லை.
(31) 42.31. உங்களின் இறைவன் உங்களைத் தண்டிக்க நாடினால் நீங்கள் அவனிடமிருந்து விரண்டோடி தப்பிச் செல்ல சக்திபெற முடியாது. உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்கும் பொறுப்பார்களோ அல்லாஹ் தண்டிக்க நாடினால் அதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் உதவியாளர்களோ அவனை விடுத்து யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள்.
(32) 42.32. அவன் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவைதான், கடலில் செல்லும் மலைகளைப் போன்ற மலைகளைப் போன்ற உயர்ந்த கப்பல்களாகும்.
(33) 42.33. அவன் அவற்றை இழுத்துச் செல்லும் காற்றை நிறுத்த நாடியிருந்தால் நிறுத்தியிருப்பான். அவை அசையாதவாறு கடலில் ஸ்தம்பித்துவிடும். நிச்சயமாக இவ்வாறு குறிப்பிடப்பட்ட கப்பல்களை படைத்திருப்பதிலும் காற்றுகளை வசப்படுத்தித் தந்திருப்பதிலும் துன்பங்களை பொறுமையாக எதிர்கொள்ளக்கூடிய, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
(34) 42.34. அல்லது புயல்காற்றை அனுப்பி இந்த கப்பல்களை அழிக்க நாடினால் மனிதர்கள் செய்த பாவங்களின் காரணமாக அவற்றை அழித்திருப்பான். அவன் தன் அடியார்களின் அதிகமான பாவங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடியவன். எனவேதான் அவற்றுக்காக அவன் அவர்களைத் தண்டிப்பதில்லை.
(35) 42.35. புயல்காற்றை அனுப்பி நாம் கப்பல்களை மூழ்கடிக்கும்போது அல்லாஹ்வின் வசனங்களில் அதை பொய்யாக்குவதற்காக தர்க்கம் புரிபவர்கள் அழிவிலிருந்து தாங்கள் எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்பதை அறிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வையே அழைப்பார்கள். மற்றவர்களை விட்டுவிடுவார்கள்.
(36) 42.36. -மனிதர்களே!- உங்களுக்கு வழங்கப்பட்ட செல்வங்கள், குழந்தைகள், பதவிகள் இன்னபிற விஷயங்கள் அனைத்தும் உலக வாழ்வின் இன்பங்கள்தாம். அவை அழிபவையே, துண்டிக்கப்படுபவையே. தன்மீதும் தன் தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள சுவனத்தின் இன்பமே நிலையான இன்பமாகும். அவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் தங்கள் இறைவனை மட்டுமே சார்ந்திருப்பார்கள்.
(37) 42.37. அவர்கள் பெரும் பாவங்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் தூரமாகியிருக்கிறார்கள். தங்களுக்கு சொல்லாலும் செயலாலும் தீங்கிழைத்தவர்கள் மீது கோபம் கொண்டால் அவர்களின் தவறுகளை மன்னித்துவிடுவார்கள். அதற்காக பழிவாங்கமாட்டார்கள். அவர்களை மன்னிப்பதில் நலவு, நன்மையிருப்பின் இவ்வாறு மன்னிப்பது அவர்கள் செய்யும் பேருபகாரமாகும்.
(38) 42.38. அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனுக்குப் பதிலளிக்கிறார்கள். தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுகிறார்கள். முக்கியமான விஷயங்களில் தங்களிடையே ஆலோசனை செய்துகொள்வார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நம் திருப்தியை நாடி செலவும் செய்வார்கள்.
(39) 42.39. தங்கள்மீது அநீதி இழைக்கப்பட்டால் அநியாயக்காரன் மன்னிப்பிற்குத் தகுதியானவன் இல்லையெனில் தங்களின் கண்ணியத்தைக் காக்கும்பொருட்டு பழிவாங்குவார்கள். இவ்வாறு பழிவாங்குவது அவர்களின் உரிமையாகும். குறிப்பாக மன்னிப்பதில் எந்த நலவும் இல்லையெனில்.
(40) 42.40. தன் உரிமையைப் பெற விரும்புபவர் அதனை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் எவ்வித அதிகரிப்பு, வரம்புமீறலுமின்றி சரிக்கு சமமான அளவே அவர் பழிவாங்க வேண்டும். யார் தனக்குத் தீங்கிழைத்தவரைத் தண்டிக்காமல் மன்னித்துவிடுவாரோ, தனக்கும் தன் சகோதரனுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்திக் கொண்டாரோ அவருடைய கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அல்லாஹ் மக்களின் செல்வங்களிலோ, உயிர்களிலோ, மானத்திலோ அநியாயம் இழைக்கும் அநியாயக்காரர்களை விரும்புவதில்லை. மாறாக அவர்களை வெறுக்கிறான்.
(41) 42.41. யார் தமக்காக பழிவாங்குகிறார்களோ அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. பழிவாங்குவதனால் அவர்கள் தங்களின் உரிமையைத்தான் பெறுகிறார்கள்.
(42) 42.42. நிச்சயமாக மக்களின் மீது அநீதி இழைத்து பூமியில் பாவங்கள் புரிபவர்களுக்குத்தான் குற்றம் சுமத்த வழி இருக்கிறது. அவர்களுக்கு மறுமையில் வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது.
(43) 42.43. யார் மற்றவர்கள் தமக்கு அளித்த தீங்குகளை பொறுமையாக சகித்து, கண்டுகொள்ளாமல் மன்னித்து விட்டுவிட்டாரோ அது அவருக்கும் சமூகத்திற்கும் நன்மைதரக்கூடியதாகும். இது புகழுக்குரிய விஷயமாகும். பெரும் பாக்கியம் பெற்றவர்களே இதற்கு வழிகாட்டப்படுவார்கள்.
(44) 42.44. யாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டாமல் சத்தியத்தைவிட்டு அவரை வழிகெடுத்துவிடுவானோ அவனுக்கு அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுடைய காரியத்தை பொறுப்பெடுக்கும் எந்த பொறுப்பாளனும் இல்லை. நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்கள் வேதனையைக் காணும் போது “நாங்கள் உலகிற்கு திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவதற்கு ஏதேனும் வழி உண்டா?” என்று அவர்கள் ஆசைப்பட்டு கூறுவதை நீர் காண்பீர்.
(45) 42.45. -தூதரே!- இந்த அநியாயக்காரர்கள் இழிவுபடுத்தப்பட்டு நரகத்தின் முன் நிறுத்தப்படுவதை நீர் காண்பீர். அப்போது அவர்கள் அதன் கடுமையான பயத்தினால் கடைக்கண்ணால் மக்களைப் பார்ப்பார்கள். அப்போது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையை சந்தித்து தங்களையும் தங்களின் குடும்பத்தாரையும் இழந்தவர்கள்தாம் உண்மையில் நஷ்டமடைந்தவர்கள்.” அறிந்துகொள்ளுங்கள், திட்டமாக நிராகரித்து பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் என்றும் முடிவடையாத நிரந்தர வேதனையில் வீழ்ந்து கிடப்பார்கள்.
(46) 42.46. மறுமை நாளில் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி உதவிசெய்யக்கூடிய யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். அல்லாஹ் யாரைக் கைவிட்டு வழிகெடுத்து விடுவானோ அவருக்கு சத்தியத்தின்பால் நேர்வழி பெற அதன்பால் கொண்டுசெல்லும் எந்தவொரு வழியும் ஒருபோதும் இல்லை.
(47) 42.47. -மனிதர்களே!- வந்தால் தடுக்க முடியாத மறுமை நாள் வருவதற்கு முன்னர், உங்கள் இறைவனின் கட்டளைகளை செயல்படுத்தல், அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகியிருத்தல், காலம் தாழ்த்துவதை விட்டுவிடுதல் ஆகிவற்றின் பக்கம் விரைவதன் மூலம் அவனுக்குப் பதிலளியுங்கள். அந்நாளில் உங்களுக்கு நீங்கள் ஒதுங்கும் எந்தப் புகலிடமும் இருக்காது. உலகில் நீங்கள் செய்த பாவங்களையும் உங்களால் மறுக்க முடியாது.
(48) 42.48. -தூதரே!- நீர் ஏவும் விஷயங்களை அவர்கள் புறக்கணித்தால் அறிந்துகொள்ளும், அவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளராக நாம் உம்மை அனுப்பவில்லை. நான் கட்டளையிட்டவற்றை எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது வேறு எந்த பொறுப்பும் இல்லை. அவர்களை விசாரணை செய்வது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற அருளை வழங்கி அவனை அனுபவிக்கச் செய்தால் அவன் மகிழ்ச்சியடைகிறான். அவர்களின் பாவங்களின் காரணமாக ஏதேனும் துன்பம், சோதனை மனிதர்களைத் தீண்டிவிட்டால், அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிப்பதும், நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வதும் அல்லாஹ் தனது நோக்கத்தின் அடிப்படையில் முடிவுசெய்தவற்றை வெறுப்பதுமே நிச்சயமாக அவர்களின் இயல்பாகும்.
(49) 42.49,50. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஆண், பெண் மற்றும் அது அல்லாதவற்றில் தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியவர்களுக்குப் பெண் குழந்தைகளை வழங்கி ஆண் குழந்தைகளைத் தடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி பெண் குழந்தைகளைத் தடுக்கிறான். அல்லது தான் நாடியவர்களுக்கு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வழங்குகிறான். தான் நாடியவர்களை குழந்தைகளற்ற மலடுகளாக ஆக்குகிறான். நிகழ்வதையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியதையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். இது அவனின் பரிபூரண அறிவு மற்றும் பூரண ஞானத்தில் உள்ளதாகும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனால் இயலாதது எதுவுமில்லை.
(50) 42.49,50. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் ஆண், பெண் மற்றும் அது அல்லாதவற்றில் தான் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியவர்களுக்குப் பெண் குழந்தைகளை வழங்குகி பெண் குழந்தைகளைத் தடுக்கிறான். தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை வழங்கி ஆண் குழந்தைகளைத் தடுக்கிறான். அல்லது தான் நாடியவர்களுக்கு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வழங்குகிறான். தான் நாடியவர்களை குழந்தைகளற்ற மலடுகளாக ஆக்குகிறான். நிகழ்வதையும் எதிர்காலத்தில் நிகழக்கூடியதையும் அவன் நன்கறிந்தவன். இது அவனின் பரிபூரண அறிவு மற்றும் ஞானத்தில் உள்ளதாகும். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவனால் இயலாதது எதுவுமில்லை.
(51) 42.51. அல்லாஹ் எந்த மனிதனுடனும் நேரடியாக பேச மாட்டான். ஆயினும் உள்ளுணர்வுடனான வஹி அல்லது வேறு வழியில் மூலமோ அல்லது பார்க்காமல் அவனது பேச்சை செவியேற்பதன் மூலம் பேசுவதோ அல்லது ஜிப்ரீல் போன்ற ஒரு வானவரை அனுப்பியோ அன்றி. அந்த வானவர் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அவன் நாடியதை மனித இனத்தைச் சார்ந்த தூதருக்கு வஹியாக அறிவிக்கின்றார். நிச்சயமாக அவன் தன் உள்ளமையிலும் பண்புகளிலும் மிக உயர்ந்தவன். தன் படைப்பில், விதிகளில், சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.
(52) 42.52. -தூதரே!- உமக்கு முன்னர் தூதர்களுக்கு வஹி அறிவித்தவாறே உமக்கும் குர்ஆனை நம்மிடமிருந்து வஹியாக அறிவித்துள்ளோம். தூதர்கள் மீது இறக்கப்பட்ட விண்ணுலக வேதங்கள் யாவை? ஈமான் என்றால் என்ன? என்பதை முன்னர் நீர் அறியாதவராக இருந்தீர். ஆயினும் நாம் குர்ஆனை ஒளியாக இறக்கியுள்ளோம். அதனைக் கொண்டு நம் அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழிகாட்டுகின்றோம். நிச்சயமாக நீர் மக்களுக்கு இஸ்லாம் என்னும் நேரான பாதையின்பால் வழிகாட்டுகின்றீர்.
(53) 42.53. அது அல்லாஹ்வின் பாதையாகும். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் படைப்பிலும் அதிகாரத்திலும் திட்டமிடுவதிலும் அவனுக்கே உரியன. விவகாரங்கள் அனைத்தும் அவற்றின் நிர்ணயம், திட்டமிடல் ஆகியவற்றில் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே உறுதியாக திரும்புகின்றன.