110 - ஸூரா அந்நஸ்ர் ()

|

(1) 110.1. -தூதரே!- உம் மார்க்கத்திற்கு அல்லாஹ்வின் உதவியும் அதன் கண்ணியமும் வந்து, மக்கா வெற்றி நிகழும் போது.

(2) 110.2. இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது.

(3) 110.3. அது நீர் அனுப்பப்பட்ட பணி முடிவடைவதற்கான அடையாளம் என்பதை அறிந்துகொள்ளும். உம் இறைவன் அளித்த உதவிக்கும் வெற்றிக்கும் நன்றிசெலுத்தும் பொருட்டு அவனைப் புகழ்ந்து போற்றுவீராக. அவனிடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் தன்னிடம் மன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை ஏற்று அவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.