113 - ஸூரா அல்பலக் ()

|

(1) 113.1. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் அதிகாலையின் இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

(2) 113.2. தீங்கு விளைவிக்கும் படைப்புகளின் தீங்குகளிலிருந்தும்.

(3) 113.3. இரவில் வெளிப்படும் உயிரினங்கள், கொள்ளையர்கள் ஆகியோரின் தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.

(4) 113.4. முடிச்சுகளில் மந்திரித்து ஓதும் சூனியக்கார பெண்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.

(5) 113.5. பொறாமைக்காரன் பொறாமையினால் உந்தப்பட்டு செய்யும் செயல்களின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.