(1) 112.1. -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை.
(2) 112.2. அவனே தலைவனாவான். அவனிடமே பரிபூரண மற்றும் அழகிய பண்புகளில் தலைமைத்துவம் முடிவடைகிறது. அவனிடமே படைப்பினங்கள் தமது தேவைகளை நிறைவேற்றுமாறு எதிர்பார்க்கின்றன.
(3) 112.3. அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. எனவே அவனுக்கு மகனும் இல்லை; தந்தையும் இல்லை.
(4) 112.4. அவனது படைப்பினங்களில் அவனுக்கு நிகரானது எதுவும் இல்லை.