(1) 104.1. மக்களைப் பற்றி அதிகம் புறம்பேசி குறைகூறித் திரிபவர்களுக்கு கடும் வேதனையும் கேடும்தான் உண்டாகும்.
(2) 104.2. அவனது கவலை செல்வத்தை சேகரிப்பதும் அதனை எண்ணி எண்ணி பாதுகாப்பதும்தான். அதனைத் தவிர வேறு கவலை அவனுக்கு இல்லை.
(3) 104.3. தான் சேகரித்த செல்வங்கள் தன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும் என்றும் இவ்வுலக வாழ்க்கையில் நிரந்தரமாக வாழ முடியும் என்றும் அவன் எண்ணுகிறான்.
(4) 104.4. இந்த மடையன் எண்ணுவது போலல்ல விடயம். தன்னில் வீசப்படும் அனைத்தையும் தனது கடுமையான சோதனையால் நசுக்கி உடைத்து விடும் நரக நெருப்பில் அவன் நிச்சயம் வீசப்படுவான்.
(5) 104.5. -தூதரே!- தன்னில் எறியப்படும் அனைத்தையும் நசுக்கிவிடும் நரக நெருப்பு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
(6) 104.6. நிச்சயமாக அது எரியக்கூடிய அல்லாஹ்வின் நெருப்பாகும்.
(7) 104.7. அது மனிதனின் உடலிலிருந்து இதயம் வரை ஊடுருவிச் செல்லக்கூடியதாகும்.
(8) 104.8. நிச்சயமாக அது அதில் வேதனை செய்யப்படுபவர்களின் மீது மூடப்பட்டிருக்கும்.
(9) 104.9. அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்கு அவைகள் நீளமான கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும்.