(1) 106.1. குறைஷிகளின் பழக்கத்திற்காகவும் அவர்களின் விருப்பத்திற்காகவும்.
(2) 106.2. அவர்கள் அச்சமின்றி யமனை நோக்கிச் செல்லும் குளிர்காலப் பயணத்தையும் ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும் கோடைகாலப் பயணத்தையும்.
(3) 106.3. ஆகவே அவர்கள் இந்த இல்லத்தின் இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு இந்தப் பயணத்தை இலகுபடுத்திக் கொடுத்தான். அவனுக்கு இணையாக அவர்கள் யாரையும் ஆக்க வேண்டாம்.
(4) 106.4. அவன்தான் பசியிலிருந்தும் அரபுக்கள் உள்ளங்களில் ஹரமைக் குறித்தும் அங்கு வசிப்பவர்களைக் குறித்தும் கண்ணியத்தை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயத்திலிருந்தும் விடுதலையளித்தான்.