(1) 107.1. மறுமை நாளில் கூலி கொடுக்கப்படுவதை மறுப்பவனை நீர் அறிவீரா?
(2) 107.2. அவன்தான் அநாதைகளின் தேவைகளை நிறைவேற்றாமல் கடுமையான முறையில் அவர்களைத் தள்ளிவிடுபவன்.
(3) 107.3. அவன் தன்னையோ, மற்றவர்களையோ ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டுவதுமில்லை.
(4) 107.5. தம் தொழுகையைவிட்டு அலட்சியமாக இருப்போருக்கு அழிவும் தண்டனையும் உண்டு. அதன் நேரம் முடியும் வரை அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.
(5) 107.5. தம் தொழுகையைவிட்டு அலட்சியமாக இருப்போருக்கு அழிவும் தண்டனையும் உண்டு. அவர்கள் அதன் நேரம் முடியும் வரை அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள்.
(6) 107.6. அவர்கள் தங்களின் தொழுகையையும் செயல்பாடுகளையும் மக்களுக்குக் காட்டுவதற்காகவே செய்கிறார்கள். அல்லாஹ்வுக்காக மட்டும் அமல்களை செய்வதில்லை.
(7) 107.7. உதவுவதால் தங்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவற்றினாலும் கூட மற்றவர்களுக்கு உதவுவதை தடுக்கிறார்கள்.