(1) 108.1. -தூதரே!- நிச்சயமாக நாம் உமக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியுள்ளோம். அவற்றுள் சுவனத்தில் கிடைக்கும் கவ்ஸர் என்னும் நதியும் ஒன்று.
(2) 108.2. இந்த அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துவீராக. இணைவைப்பாளர்கள் பலியிடுவதன் மூலம் தமது சிலைகளை நெருங்குவதற்கு மாறாக அவனுக்கு மட்டுமே தொழுது, அறுத்துப் பலியிடுவீராக.
(3) 108.3. நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான். அவன் மறக்கப்பட்டுவிட்டான். அவன் நினைவுகூறப்பட்டாலும் தீய முறையிலேயே நினைவுகூறப்படுகிறான்.