109 - ஸூரா அல்காபிரூன் ()

|

(1) 109.1. -தூதரே!- நீர் கூறுவீராக: “அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே!

(2) 109.2. நீங்கள் வணங்கும் சிலைகளை நான் தற்போதும் எதிர்காலத்திலும் ஒரு போதும் வணங்கமாட்டேன்.

(3) 109.3. நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.

(4) 109.4. நீங்கள் வணங்கும் சிலைகளை நான் வணங்கக்கூடியவன் அல்ல.

(5) 109.5. நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்கக்கூடியவர்கள் அல்ல.

(6) 109.6. உங்களுக்கு நீங்கள் உங்களுக்காக உருவாக்கிக் கொண்ட மார்க்கம். எனக்கு அல்லாஹ் என்மீது இறக்கிய மார்க்கம்.