(1) 111.1. நபியவர்களின் சாச்சாவான அபூலஹபின் நஷ்டமான செயலினால் அவனது இரண்டு கைகளும் அழிந்துவிட்டது. ஏனெனில் அவன் தூதருக்குத் தொல்லையளித்துக் கொண்டிருந்தான். அவனது முயற்சி வீணாகிவிட்டது.
(2) 111.2. அவனது செல்வமும் பிள்ளைகளும் அவனுக்கு என்ன பயனை கொடுத்தது? அவனை விட்டும் வேதனையைத் தடுக்கவுமில்லை. இறையருளையும் அவனுக்குப் பெற்றத்தரவில்லை.
(3) 111.3. அவன் மறுமை நாளில் எரியக்கூடிய நரகத்தில் பிரவேசிப்பான். அதன் வெப்பத்தை அனுபவிப்பான்.
(4) 111.4. தூதரின் பாதையில் முட்களைப் போட்டு தொல்லையளித்துக் கொண்டிருந்த அவனது மனைவியான உம்மு ஜமீல் அதில் நுழைவாள்.
(5) 111.5. அவளது கழுத்தில் உறுதியாக திரிக்கப்பட்ட கயிறு கட்டப்பட்டிருக்கும். அவள் அதன் மூலம் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவாள்.