90 - ஸூரா அல்பலத் ()

|

(1) 90.1. அல்லாஹ் மக்கா என்னும் புனித நகரத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான்.

(2) 90.2. -தூதரே!- நீர் அங்கு செய்பவை கொல்லப்படத் தகுதியானவர்களைக் கொன்றது, கைதிகளாகப் பிடிக்கப்படத் தகுதியானவர்களை கைதிகளாகப் பிடித்தது உமக்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.

(3) 90.3. அல்லாஹ் மனிதஇனத் தந்தையைக் கொண்டும் அவனிலிருந்து தோன்றும் சந்ததியைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.

(4) 90.4. மனிதன் இவ்வுலகில் அனுபவிக்கும் சிரமங்களினால் அவனைக் கஷ்டத்திலும் சிரமத்திலும் நாம் படைத்தோம்.

(5) 90.5. தான் பாவங்களை சம்பாதித்தால் தனக்கெதிராக யாரும் சக்திபெற மாட்டார்கள், தன்னை யாராலும் அது அவனைப் படைத்த இறைவனாக இருந்தாலும் தண்டிக்க முடியாது என்று நிச்சயமாக மனிதன் எண்ணிக்கொண்டானா?

(6) 90.6. அவன் கூறுகிறான்: “நான் ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன், என்று.”

(7) 90.7. தான் செலவழித்ததைக்கொண்டு பெருமையடிக்கும் மனிதன் தன்னை அல்லாஹ் பார்க்கவில்லை என்றும் தன் செல்வங்களில், தான் சம்பாதித்தது குறித்தும் செலவுசெய்தது குறித்தும் அவன் கணக்குக் கேட்க மாட்டான் என்றும் எண்ணிக் கொண்டானா?

(8) 90.8. நாம் அவனுக்கு பார்க்கக்கூடிய இரு கண்களை ஆக்கவில்லையா?

(9) 90.9. பேசக்கூடிய ஒரு நாவையும் இரு உதடுகளையும் (ஆக்கவில்லையா?)

(10) 90.10. நாம் அவனுக்கு நன்மையின் பாதையையும் அசத்தியப் பாதையையும் அறிவித்துக் கொடுக்கவில்லையா?

(11) 90.11. அவன் சுவனத்தை விட்டும் பிரிக்கும் கணவாயைக் கடக்குமாறு வேண்டப்படுவான்.

(12) 90.12. -தூதரே!- சுவனம் செல்வதற்குக் கடக்க வேண்டிய கணவாயைக் குறித்து உமக்கு அறிவித்தது எது?

(13) 90.13. அது ஆண் அல்லது பெண் அடிமையை விடுதலை செய்வதாகும்.

(14) 90.14. அல்லது உணவு கிடைப்பது அரிதான பசி, பட்டினியுடைய நாளில் உணவளிப்பதாகும்,

(15) 90.15. தந்தையை இழந்த உறவுக்கார குழந்தைக்கோ.

(16) 90.16. அல்லது எதுவும் சொந்தம் இல்லாத ஏழைக்கோ ஆகும்.

(17) 90.17. பின்னர் அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு வணக்கவழிபாடுகளைச் செய்வதிலும் பாவங்களிலிருந்து விலகியிருப்பதிலும் கஷ்டங்களிலும் பொறுமையைக் கடைபிடிக்கும்படியும் அவனுடைய அடியார்களுடன் பொறுமையாக நடந்துகொள்ளும்படியும், கிருபையைக்கொண்டும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுபவர்களில் உள்ளவராக இருப்பார்.

(18) 90.18. இந்தப் பண்புகளை உடையவர்கள்தாம் வலதுபுறத்தில் உள்ளவர்களாவர்.

(19) 90.19. நம் தூதர்மீது இறக்கப்பட்ட நம் வசனங்களை நிராகரிப்பவர்கள்தாம் இடதுபுறத்தில் உள்ளவர்களாவர்.

(20) 90.20. மறுமை நாளில் அவர்களின்மீது மூடப்பட்டுள்ள நெருப்பு இருக்கும். அதில் அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள்.