(1) 99.1. மறுமை நாள் நிகழும் சந்தர்ப்பத்தில் பூமி பலமாக உலுக்கப்படும் போது
(2) 99.2. அது தன்னுள் இருக்கும் இறந்தவர்களையும் ஏனையவற்றையும் வெளியேற்றிவிடும்.
(3) 99.3. மனிதன் தடுமாற்றமடைந்தவனாகக் கேட்பான்: “ஏன் இந்த பூமி ஆட்டம் காணுகிறது?”
(4) 99.4. அந்த மாபெரும் நாளில் அது தன்மீது நிகழ்ந்த நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்தையும் அறிவித்துவிடும்.
(5) 99.5. ஏனெனில் அல்லாஹ் அதற்கு அவற்றை அறிவித்துக்கொடுத்து அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான்.
(6) 99.6. பூமி உலுக்கப்படும் அந்த மாபெரும் நாளில் மக்கள் விசாரணை நிலையத்திலிருந்து உலகில் தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக குழு குழுவாக வெளியேறி வருவார்கள்.
(7) 99.7. யார் சிறிய எறும்பு அளவு நற்செயல் புரிந்திருப்பாரோ அதனை அவர் தனக்கு முன்னால் காண்பார்.
(8) யார் ஒரு சிறு எறும்பின் அளவு தீய செயல் செய்தாரோ அதனை அவ்வாறே காண்பார்.